147 ஆண்டு ஜடேஜா சாதனை.. அஸ்வின் உடைக்க அருமையான வாய்ப்பு.. கும்ப்ளே ஆசிய ஆசியா ரெக்கார்டு முறியடிப்பு

0
255
Ashwin

தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக புது சாதனையைப் படைக்க அருமையான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் உடைய சுழல் பந்து வீச்சு கூட்டாளி ரவீந்திர ஜடேஜா 147 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என வெற்றி பெற்ற டெஸ்ட் போட்டிகளில் புது வரலாற்றை பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரவீந்திர ஜடேஜா உலகச் சாதனை

பங்களாதேஷ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்ஸில் 86 ரன்கள் எடுத்தார்.இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் இரண்டு மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று என மொத்தம் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

இதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற ஆட்டங்களில் மட்டும் 2003 ரன்கள் மற்றும் 218 விக்கெட்டுகள் கைப்பற்றியவராக மாறினார். இதன் மூலம் வெற்றி பெற்ற போட்டிகளில் 2000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகள் தாண்டி எடுத்த முதல் வீரராக 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்தார்.

- Advertisement -

அஸ்வினுக்கு காத்திருக்கும் உலகச் சாதனை

இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா போலவே ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு உலகச் சாதனை காத்திருக்கிறது. ரவிச்சந்திரன் அஸ்வின் தற்பொழுது 1943 ரன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற்ற போட்டிகளில் எடுத்திருக்கிறார். மேலும் வெற்றி பெற்ற போட்டிகளில் 369 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கொண்டு 57 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற்ற போட்டிகளில் 2000 ரன்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வீரர் என்கின்ற அரிய சாதனையை 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக படைப்பார்.

இதையும் படிங்க : 94 வருடம்.. பிராட்மேன் சாதனையை சமன் செய்த இலங்கை கமிந்து மெண்டிஸ்.. அபார சதம் அடித்து ரெக்கார்டு

இது மட்டும் இல்லாமல் ஆசியாவில் அதிக விக்கெட் கைப்பற்றியவராக 419 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்த அணில் கும்ப்ளே சாதனையை, இந்த போட்டியில் நஜ்முல் சாந்தோ விக்கெட்டை கைப்பற்றி, ஆசியாவில் அதிக விக்கெட் கைப்பற்றி இந்திய வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்திருக்கிறார்.

- Advertisement -