நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மாவின் மந்தமான பேட்டிங் வடிவம் மற்றும் அவரது ஃபார்ம் குறித்து இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் சுவாரஸ்யமாக விவாதித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தாலும், சீனியர் வீரரான ரோகித் சர்மா எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் குவிக்கவில்லை. அவர் விளையாடிய நான்கு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து வெறும் 30 ரன்கள் மட்டுமே எடுத்தார், மேலும் அவரது பேட்டிங் சராசரி மிகவும் மோசமாக 7.50 என்ற அளவில் மட்டுமே பதிவானது.
ரோகித் சர்மாவின் தற்போதைய பேட்டிங் ஃபார்ம் மற்றும் அணியில் அவரது பங்கு குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது, “ரோகித் சர்மாவிடம் இருந்து அணியால் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொணர முடியுமா என்பதை அணி நிர்வாகம் இப்போது யோசிக்க வேண்டும். நான் அந்தப் பொறுப்பில் இருந்திருந்தால் எப்போதும் அவர் மீது நம்பிக்கை வைத்திருப்பேன். நீங்கள் அவருக்கு ஆதரவளித்து அவரிடமிருந்து பணியை வாங்குவதைப் பற்றி யோசிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.”
மேலும் அவர் பேசும் போது ” ரோகித் சர்மா போன்ற ஒரு வீரரை கார்னர் செய்யக்கூடாது. அவரிடம் இருக்கும் அனுபவத்தை வைத்து எப்படி அவரிடம் வேலை வாங்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவரை கார்னர் செய்து வெளியில் அனுப்ப யோசிக்க கூடாது என்று கூறியிருக்கிறார்.






