தற்போது இலங்கை காலை மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் ஒரு சிறப்பு சாதனை படைத்திருக்கிறார்.
நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நாள் முடிவு
இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதல் நாள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்தது. தினேஷ் சண்டிமால் சதம் அடித்து 116 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். களத்தில் ஏஞ்சலோ மேத்யூஸ் 77 மற்றும் கமிந்து மெண்டிஸ் 51 ரன்கள் எடுத்து நின்றார்கள்.
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடர்ந்து நடக்க ஏஞ்சலோ மேத்யூஸ் 88 ரன்கள் உடன் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து கேப்டன் தனஞ்செய டி சில்வா 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதை தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கமிந்து மெண்டிஸ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய ஐந்தாவது சதத்தை அடித்து அசத்தினார். தற்போது இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 445 ரன்கள் எடுத்திருக்கிறது.
டான் பிராட்மேன் சாதனை சமன்
மெண்டிஸ் மொத்தம் எட்டு டெஸ்ட் போட்டிகளில் 13 இன்னிங்ஸ்களில் விளையாடி 5 சதம் மற்றும் 4 அரை சதம்என அடித்திருக்கிறார். விளையாடிய எட்டு டெஸ்ட் போட்டிகளிலும் 50 ரன்களுக்கு மேல் தொடர்ந்து எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகச் சாதனை படைத்திருக்கிறார்.
இந்த நிலையில் 13 இன்னிங்ஸ்களில் 5 சதங்கள் எடுத்து பிராட்மேன் சாதனையையும் சமன் செய்திருக்கிறார். பிராட்மேன் 1930 ஆம் ஆண்டு தனது முதல் 13 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஐந்து சதங்கள் எடுத்திருந்தார். தற்போது இதை கமிந்து மெண்டிஸ் சமன் செய்திருக்கிறார்.
இதையும் படிங்க : இந்திய அணி 2 முறை அதை செய்யட்டும்.. பின் கம்பீரின் உண்மையான குணத்தை பார்ப்பிங்க – தமிம் இக்பால் பேட்டி
டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி குறைந்த எண்ணிக்கையில் 5 சதம் அடித்தவர்கள் :
10 – எவர்டன் வீக்ஸ் (1948)
12- ஹெர்பர்ட் சட்க்ளிஃப் (1925)
12- நீல் ஹார்வி (1950)
13- டான் பிராட்மேன் (1930)
13- ஜார்ஜ் ஹெட்லி (1931)
13 – கமிந்து மெண்டிஸ் (2024)*