சமூக வலைதளங்களில் நேற்றிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விராட் கோலியின் கேப்டன்சி குறித்து ஒரு சில விஷயங்களை பிசிசிஐ’இடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியது. உலகக் கோப்பை டி20 தொடர் நடந்து முடிந்தவுடன், விராட் கோலி டி20 போட்டிகளில் இனி கேப்டனாக நீடிக்க மாட்டேன் என்று முன்பே கூறியிருந்தார்.
அவர் அவர் அப்படி கூறியதற்கு பின்னர் ஒரு மிகப்பெரிய விஷயம் நடந்திருக்கிறது. பிசிசிஐ தரப்பில் கேட்கப்பட்ட ஆலோசனையில் ரவிச்சந்திரன் அஸ்வின் உட்பட ஒரு சில சீனியர் வீரர்கள் புகார் அளித்ததாகவும், அதன் அடிப்படையில் இந்த முடிவை அவர் வலுக்கட்டாயமாக எடுத்ததாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகியது.
தொடர் விமர்சனங்களுக்கு செவிசாய்த்த ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின் மீது தொடர்ச்சியாக பல விமர்சனங்கள் இது சம்பந்தமாக எடுத்து வைக்கப்பட்டன. இவை அனைத்திற்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது தனது நகைச்சுவையான பதில் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், தன்னுடைய இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் இந்த விமர்சனம் குறித்து ஒரு பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் போலி செய்திகள் என்கிற பெயரில் இயங்கும் வலை தளத்தை நான் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று முதலில் பதிவிட்டார். அதன் பின்னர் நகைச்சுவையாக அதை நான் கண்டுபிடித்துவிட்டேன். அவர்கள் தற்பொழுது வேறு பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
Ashwin trolling "Fake news" in media as there were reports he complained against Kohli to BCCI. pic.twitter.com/IQOUDNDcP8
— Johns. (@CricCrazyJohns) September 30, 2021
அவர்கள் கூறிய செய்திகள் அனைத்தும் மிகவும் வேடிக்கையாகவும், நகைச்சுவையாக உள்ளது. அந்த போலி செய்திகளை படிக்க படிக்க தனக்கு நன்றாக பொழுது போகிறது என்றும் நகைச்சுவையாக அஸ்வின் பதிவிட்டார். இந்த இரண்டு பதிவின் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் விராட் கோலி இடையில் கூறப்பட்ட செய்திகள் அனைத்தும் வெறும் வதந்திகள் என்று தற்பொழுது உறுதியாகியுள்ளது.
உலகக் கோப்பை டி20 தொடரில் விளையாட தயாராக இருக்கும் அஸ்வின்
உலகக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. வாஷிங்டன் சுந்தர் விளையாட முடியாத காரணத்தினால், அவரது இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் சர்வதேச டி20 போட்டியில், குறிப்பாக உலக கோப்பை டி20 தொடரில் விளையாட அவர் தேர்வாகியுள்ளார்.
தற்பொழுது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக அஸ்வின் விளையாடி வருகிறார். சிறப்பான ஃபார்மில் இருக்கும் அவர் நடக்க இருக்கின்ற உலகக்கோப்பை டி20 தொடரிலும் இந்திய அணிக்கு சிறப்பாக விளையாடுவார் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.
இந்திய அணிக்காக 46 டி20 போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்டுகளையும், ஐபிஎல் தொடரில் 162 போட்டிகளில் விளையாடி 141 விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றியுள்ளார். அவரது அனுபவம் இந்திய அணிக்கு நிச்சயமாக கைகொடுக்கும் என்று வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.