தற்போது இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் ரவிச்சந்திரன் அஸ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் புது சாதனை படைத்திருக்கிறார்.
உத்திர பிரதேஷ் கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் மூன்று நாட்கள் மழையால் பாதிக்கப்பட்டது. இன்று நான்காவது நாள் மழை இல்லாமல் தெளிந்த வானிலை உடன் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை
இன்று போட்டி தொடங்கியதும் ஜஸ்பிரித் பும்ரா முஸ்பிக்யூர் ரஹிமை 11 ரன்களில் வெளியேற்றினார். இது தொடர்ந்து உள்ளே வந்து அதிரடியாக ஆரம்பித்த லிட்டன் தாசை முகமது சிராஜ் 13 ரன்னில் வெளியேற்றினார். இதைத் தொடர்ந்து வந்த ஷாகிப் அல் ஹசன் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார். நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இது 50வது விக்கெட் ஆகும். மேலும் இதுவரையிலான மூன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளிலும் 50-க்கும் மேற்பட்ட விக்கெட் கைப்பற்றிய ஒரே பந்துவீச்சாளராக அஸ்வின் சாதித்திருக்கிறார்.
முதல் முறை 14 போட்டிகளில் 71 விக்கெட்டுகள், இரண்டாவது முறை 13 போட்டிகளில் 61 விக்கெட்கள், மூன்றாவது முறை 10 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். மேலும் ஒட்டுமொத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் நாதன் லயன் 187 விக்கெட் கைப்பற்றி முதலிடத்தில் இருக்கிறார். ரவிச்சந்திரன் அஸ்வின் 182 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இந்த சாதனையையும் அடுத்த நியூசிலாந்து தொடரில் முறியடிப்பார் என்பது உறுதி.
2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இன்னொரு சாதனைக்கு வாய்ப்பு
நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் அதிக டெஸ்ட் விக்கெட் கைப்பற்றிய சாதனையை இந்த டெஸ்ட் போட்டியிலேயே அஸ்வின் முறியடிப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஜோஷ் ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா) – 51
ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) – 50*
பாட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) – 48
மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) – 48
கிறிஸ் வோக்ஸ் (இங்கிலாந்து) – 43
நாதன் லியோன் (ஆஸ்திரேலியா) – 43
இதையும் படிங்க : ஏமாத்துற வேலை வேணாம்.. நாங்க பார்க்காததா? – இங்கிலாந்து பவுலர் மீது ரிக்கி பாண்டிங் விமர்சனம்
பங்களாதேஷ அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர்கள் :
ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) – 31*
ஜாகீர் கான் (இந்தியா) – 31
இஷாந்த் சர்மா (இந்தியா) – 25
உமேஷ் யாதவ் (இந்தியா) – 22
ஷகிப் அல் ஹசன் (வங்காளதேசம்) – 21