ஏமாத்துற வேலை வேணாம்.. நாங்க பார்க்காததா? – இங்கிலாந்து பவுலர் மீது ரிக்கி பாண்டிங் விமர்சனம்

0
381
Ponting

நேற்று இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மேத்யூ பாட்ஸ் மாற்று ஷூவை கேட்டு வாங்கிய விவகாரத்தில் ரிக்கி பாண்டிங் விமர்சனம் செய்திருக்கிறார்.

இங்கிலாந்து அணி சொந்த நாட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில்விளையாடியது. இரண்டு அணிகளும் தல இரண்டு போட்டிகளை வென்று இருக்க நேற்று தொடரை யாருக்கு? என்று நிர்ணயிக்கும் கடைசி ஐந்தாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

- Advertisement -

மழையால் வந்த வினை

நேற்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 309 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணி 350 ரன்கள் தாண்டி எடுக்கக்கூடிய சூழ்நிலை இருந்தது. இப்படியான நிலையில் டிராவிஸ் ஹெட் இடம் நான்கு விக்கெட்டுகளை பறிகொடுத்து இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது.

இது தொடர்ந்து களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி அதிரடியாக ஆரம்பித்து விளையாடியது. டிராவிஸ் ஹெட் விக்கெட் இழந்தாலும் ஸ்மித் மற்றும் மேத்யூ ஷார்ட் அதிரடியாக சென்றார்கள். இன்னொரு பக்கம் மழை வரும் வாய்ப்பு அதிகமாக இருந்தது. போட்டி 20 ஓவர்களை தாண்டினால் மட்டுமே டக்வோர்த் லீவிஸ் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேத்யூ பாட்ஸ் செய்த காரியம்

இந்த நிலையில் இங்கிலாந்தின் மேத்யூ பாட்ஸ் 18 ஆவது ஓவரை வீசினார். அப்பொழுது மழை மேகங்கள் சூழ்ந்து கொண்டு வந்தது. ஆஸ்திரேலியா அணியோ டக்வோர்த் லீவிஸ் விதிப்படி வெற்றிக்கு தேவையான ரண்களை விட அதிகமாக எடுத்திருந்தது. ஆனால் ஓட்டு 20 ஓவரை தாண்டினால் மட்டுமே இந்த விதிப்படி கணக்கிடப்பட்டு வெற்றி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி வித்தியாசமான சூழ்நிலையில் மேத்யூ பாட்ஸ் தனது ஷூ சரியில்லை என காரணம் காட்டி மாற்று ஷூவை கொண்டு வரச் சொன்னார். பிறகு மாற்று ஷூ கொண்டுவரப்பட அதை பொறுமையாக அணிந்து கொண்டு அடுத்து மீண்டும் பந்து வீசுவதற்கு சென்றார். இது வேண்டுமென்றே காலம் தாழ்த்தி போட்டியை யாருக்கும் முடிவில்லாமல் செய்ய மேத்யூ பாட்ஸ் செய்த ஏமாற்று வேலை என ரிக்கி பாண்டிங் விமர்சனம் செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: 53 வருடத்தில் முதல் முறை.. ஸ்மித் கேப்டனாக சாதனை.. இங்கிலாந்துக்கு எதிராக ஆஸி 2 மாஸ் ரெக்கார்டுகள்

இது குறித்து ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “நாங்க இந்த சீனை எல்லாம் ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். இந்த நேரத்தில் எல்லாம் நிமிடத்திற்கு நிமிடம் வேடிக்கையாக மாறிக் கொண்டே இருக்கிறது. அவருடைய ஷூவில் எந்த தவறும் இல்லை என்பதை நாம் பார்த்தோம். அவர் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -