இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இலங்கையில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் ஆஸ்திரேலியா அணி பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கேப்டன் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி இருவரும் சதம் அடித்து அசத்தியிருக்கிறார்கள்.
இரு அணிகளுக்கும் இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
போராடிய தினேஷ் சண்டிமல் – குசால் மெண்டிஸ்
முதலில் பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணிக்கு நட்சத்திர வீரர்கள் அனைவருமே ஏமாற்றம் அளித்தார்கள். இந்த நிலையில் ஒரு முனையில் நின்று போராடிய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் குசால் மெண்டிஸ் 139 பந்துகளில் 85 ரன்கள் எடுக்க, தினேஷ் சண்டிமல் 163 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார்கள். இலங்கை அணி 97.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 257 ரன்கள் எடுத்தது. ஸ்டார்க், லயன் மற்றும் குஹ்னேமான் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் 22 பந்தில் 21 ரன், உஸ்மான் கவஜா 57 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டங்கள் இழந்தார்கள். இதை தொடர்ந்து வந்த நட்சத்திர பேட்ஸ்மேன் லபுசேன் 6 பந்தில் 4 ரன் எடுத்து வெளியேறினார்.
ஸ்மித் – அலெக்ஸ் கேரி அபார சதங்கள்
இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் காரி இருவரும் இணைந்து அபாரமாக விளையாடினார்கள். இலங்கை சுழல் பந்துவீச்சாளர்களை செட்டில் ஆக விடாமல் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடி ரன்களை எடுத்துக் கொண்டே இருந்தார்கள். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த இவர்கள் தொடர்ந்து விளையாடி சதம் அடித்து கலக்கினார்கள்.
இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஸ்மித் ஆட்டம் இழக்காமல் 239 ரன்கள், அலெக்ஸ் கேரி ஆட்டம் இழக்காமல் 156 பந்துகளில் 139 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியா அணி 80 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் குவித்து 73 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. 25 ஓவர்கள் முடிந்து ஜோடி சேர்ந்த இவர்கள் தொடர்ந்து ஆட்டம் இழக்காமல் 55 ஓவர்கள் களத்தில் நின்று 331 பந்துகளில் 239 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியிருக்கிறார்கள்.
இதையும் படிங்க : 2வது ODI.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. ஸ்ரேயாஸ் நீக்கம் வருணுக்கு வாய்ப்பா.. விராட் வருவாரா?
ஆஸ்திரேலிய கேப்டன் மித்துக்கு இது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 36 வது சதமாகும். இதன் மூலம் தற்போது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பவர்களில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்திருக்கும் ஜோ ரூட் சாதனையை சமன் செய்தார். மேலும் ஆஸ்திரேலியாவின் 148 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆசிய மண்ணில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த ஆஸ்திரேலியா டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆகவும் சாதனை படைத்திருக்கிறார்.






