கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் போலவே, நடக்கும் டி20 உலகக்கோப்பை தொடரிலும் ஆப்கானிஸ்தான் அணி ஆச்சரியங்களை நடத்தி வருகிறது. மேலும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் குல்பதின் நைப் காயம் என்று கீழே விழுந்தது இப்பொழுது வரை நிறைய சர்ச்சைகளை உண்டாக்கி கொண்டு வருகிறது.
ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் போட்டியின் போது, ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சில் இருந்த நிலையில் மழை பெய்ய ஆரம்பிக்க நடுவர் போட்டியை நிறுத்தவில்லை. அந்த நேரத்தில் சில ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி சில ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் முன்னணியில் இருந்தது.
எனவே ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஆட்டத்தை மெதுவாக்கும்படி சைகை செய்ய, உடனே ஸ்லீப்பில் நின்ற குல்பதின் நைப் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதாக கீழே விழுந்தார். இதன் காரணமாக போட்டி அந்த இடத்தில் தடைப்பட, மழையும் வேகமாக பெய்ய ஆரம்பிக்க, நடுவர்கள் போட்டியை நிறுத்தினார்கள். ஆனால் போட்டி உடனே துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இது குறித்து பலரும் தங்களுடைய விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். ஆஸ்திரேலிய தரப்பில் இருந்து ஆடம் ஜாம்பா இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அதே சமயத்தில் இதற்கு இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும்பொழுது “குல்பதின் அப்படித்தான் விழுந்தார். உடனே மக்கள் இது தண்டனைக்குரிய குற்றம் என பேச ஆரம்பித்து விட்டார்கள்.என்ன கொடுமை இது? அவர் தன்னுடைய நாட்டுக்காக விளையாடுகிறார். தன்னுடைய நாட்டுக்காக கோப்பையை வெல்லவும் அதற்கு தகுதி பெறவும் முயற்சி செய்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது?” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : இந்தியா ஆஸியை ஏமாத்தி ஜெயிச்சிருக்கு.. 13வது ஓவரிலேயே இந்த வேலைய காட்டிட்டாங்க – இன்சமாம் உல் ஹக் குற்றச்சாட்டு
மேலும் அரை இறுதியில் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து அஸ்வின் உடன் இணைந்து பேசிய ராபின் உத்தப்பா ” ஆப்கானிஸ்தான் அணிக்கு பேட்டிங்தான் பிரச்சனையாக இருக்கிறது. அவர்கள் முழுமையாக குர்பாசை நம்பி இருக்கிறார்கள். அவருடைய ஆட்டம்தான் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றி தோல்வியை முடிவு செய்யும். மேலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு நல்ல மொமென்டம் இருக்கிறது. அவர்கள் அதை அரையிறுதியில் நீட்டித்துச் செல்லலாம்” என்று கூறியிருக்கிறார்.






