நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா ஆஸ்திரேலியா அணியில் மோதிக் கொண்ட போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் பந்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் குற்றம் சாட்டி இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தப் போட்டியில் அர்ஸ்தீப் சிங் முதல் ஓவரில் டேவிட் வார்னர் விக்கெட்டை கைப்பற்றினார். பின்பு ரோகித் சர்மா இவரை 15ஆவது ஓவருக்கு கொண்டு வந்தார். அங்கு மிக முக்கியமான மேத்யூ வேட் மற்றும் டிம் டேவிட் என இரண்டு விக்கெட் பற்றினார்.
பந்து மிக நன்றாக தேய்ந்திருந்தால் மட்டுமே கிடைக்கக்கூடிய ரிவர்ஸ் ஸ்விங் இவருக்கு போட்டியில் 15வது ஓவரிலேயே கிடைத்தது. இதுதான் தற்பொழுது சர்ச்சையாக மாறியிருக்கிறது. பங்கு இவ்வளவு சீக்கிரத்தில் ரிவர்ஸ் ஸ்விங் ஆகாது எனவும், இது குறித்து நடுவர்கள் கவனமாக இருந்து விசாரிக்க வேண்டும் என இன்சமாம் உல் ஹக் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “அர்ஸ்தீப் சிங் பந்தை 15வது ஓவரில் கூட ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடிகிறது. இது மிக சீக்கிரமாக நடந்திருக்கிறது. அப்படி என்றால் பந்து 13வது ஓவரிலேயே அதற்கு தயாராக இருந்திருக்கிறது. நடுவர்கள் கொஞ்சமாவது இங்கே கண்களைத் திறந்து பார்க்க வேண்டும்
சில அணிகள் என்று வரும் பொழுது மட்டும் நடுவர்கள் கண்களை மூடி கொள்வார்கள். ஜிம்பாப்வே தொடரில் வாசிம் அக்ரம் பந்தை ஒருபுறமாக ஈரம் செய்தார். நான் இது குறித்து நடுவர்களிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கூட அவர்கள் எனக்கு அபராதம் விதித்தார்கள்.
இதையும் படிங்க : இது ஒன்னு நடந்தா தென் ஆப்பிரிக்காதான் சாம்பியன்.. இந்தியா வீட்டுக்குதான் – பிராட் ஹாக் கணிப்பு
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் இப்படி செய்து இருந்தால் உடனே இது குறித்து பேச்சு வந்திருக்கும். எங்களுக்கு பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்யத் தெரியும். அர்ஸ்தீப் சிங் இவ்வளவு சீக்கிரத்தில் செய்கிறார் என்றால், பந்தை ஏதோ செய்திருக்கிறார்கள். இந்தியாவில் பும்ரா எங்களைப் போல ரிவர்ஸ் ஸ்விங் செய்யக்கூடியவர். ஆனால் சில பந்துவீச்சாளர்களுக்கு பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆக வேண்டும் என்றால், பந்தை ஏதாவது சேதப்படுத்தினால் மட்டும்தான் ஆகும்” என்று கூறி இருக்கிறார்.