ஐபிஎல் மினி ஏலம்.. சிஎஸ்கே இந்த 3 வீரர்களை கட்டாயம் வாங்கும்.. வேற மாதிரி டீமா மாறும் – அஸ்வின் கணிப்பு

0
13
Ashwin

2025 ஐபிஎல் மினி எழுத்தில் சிஎஸ்கே வாங்கக்கூடிய வீரர்கள் யார் என்பது பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார். மேலும் மூன்று குறிப்பிட்ட வீரர்களை சிஎஸ்கே வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்திருக்கிறார்.

தற்போது சிஎஸ்கே அணிகள் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் இருவரும் செல்வது உறுதியாகவே தெரிகிறது. மேலும் அங்கிருந்து சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் இந்த வருடம் வருகிறார் என்பதும் உறுதியாக தெரிகிறது.

- Advertisement -

சிஎஸ்கே பலமாகும்

“இந்த சிஎஸ்கே அணியை பலமாக்க முடியும். இந்த அணிக்கு துவக்க வீரர்களாக ருதுராஜ் மற்றும் சஞ்சு சாம்சன் இருப்பார்கள். இதைத்தொடர்ந்து சிஎஸ்கே ரேடாரில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஷ் ராணா இருவரும் வருவார்கள். இவர்கள் இருவரில் ஒருவர் மூன்றாவது இடத்தில் விளையாடுவார்கள். அடுத்த மூன்று இடங்களுக்கு பிரிவிஸ், சிவம் துபே மற்றும் கேமரூன் கிரீனை வைக்க பார்ப்பார்கள்”

“இங்கே ஆயுஸ் மாத்ரே ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒரு வீரராக இருக்கிறார். ஆனால் தற்பொழுது சென்னை விக்கெட் மெதுவாக மாறிவிட்டது. எனவே இங்கு ஸ்கொயரில் ரன்கள் எடுக்க வேண்டும். அதற்கு ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடக்கூடிய வீரர்கள் தேவை. சிஎஸ்கே அணியில் தற்போது ருதுராஜ் தவிர வேறு யாரும் இதை விளையாட இல்லை. எனவே நிதிஷ் ரானா இல்லை வெங்கடேஷ் ஐயரை பார்ப்பார்கள்”

- Advertisement -

இருவரில் ஒருவர் உறுதி

” எனவே இந்த காரணத்தினால் மூன்றாவது இடத்தில் விளையாடுவதற்கு வெங்கடேஷ் ஐயர் அல்லது நிதீஷ் ராணா இருவரில் ஒருவர் கட்டாயம் சிஎஸ்கே அணிக்கு வருவார்கள். இவர்கள் இருவரும் ஸ்கொயரில் ரன் அடிப்பதற்கான ஷாட் வைத்திருக்கிறார்கள்”

இதையும் படிங்க : அடுத்து இந்தியா தெஆ 3 தொடர்கள்.. அட்டவணை மற்றும் எந்த டிவியில் பார்க்கலாம் – முழு விபரங்கள்

“தற்போது ரவீந்திர ஜடேஜாவின் இடத்தை நிரப்புவதற்கு ஸ்ரேயாஸ் கோபாலை அவர்கள் யோசிக்கலாம். அவர் தற்போது கர்நாடக மகாராஜா டிராபியில் சிறப்பாகவே செயல்பட்டு இருந்தார். மேலும் இதற்காக ஒரு வெளிநாட்டு வீரராக ஹசரங்காவை அவர்கள் எதிர்பார்க்கலாம். அவர் ஏலத்திற்கு வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -