அடுத்து இந்தியா தெஆ 3 தொடர்கள்.. அட்டவணை மற்றும் எந்த டிவியில் பார்க்கலாம் – முழு விபரங்கள்

0
5
ICT

இந்த மாதம் தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களில் விளையாட இருக்கிறது. இதற்கான முழு அட்டவணையை பார்க்கலாம்.

டெஸ்ட் தொடர்

இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 22ஆம் தேதி அசாம் கவுகாத்தி மைதானத்திலும் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

ஒருநாள் தொடர்

இதற்கடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடர் நவம்பர் 30, டிசம்பர் 3 மற்றும் 6ஆம் தேதிகளில், ராஞ்சி, ராய்ப்பூர், விசாகப்பட்டினம் மைதானங்களில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

டி20 தொடர்

இறுதியாக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இந்த தொடர் டிசம்பர் 9, 11, 14, 17, 19 ஆகிய தேதிகளில் கட்டாக், நியூ சண்டிகர், தரம்சாலா, லக்னோ மற்றும் குஜராத் அகமதாபாத் மைதானங்களில் நடைபெற இருக்கிறது.

இதையும் படிங்க : இப்ப ஷமிக்கு நடந்துகிட்டு இருக்கிறது நியாயம் இல்ல.. நான் நேரடியா ஒரு விஷயத்தை பார்த்தேன் – கங்குலி ஆதரவு

எந்த டிவியில் பார்க்கலாம்

இந்த மூன்று தொடர்களையும் ஜியோ ஹாட்ஸ்டாரில் டிவியில் பார்க்கலாம். மேலும் ஆன்லைனில் இதே ஜியோ ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம். இந்திய அணிக்கு எல்லா வகையிலும் தென் ஆப்பிரிக்க தொடர் மிக முக்கியமாக இருப்பதால், இந்த தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது.

- Advertisement -