என்னால கேப்டன்சி செய்ய முடியாதுனு நினைக்கிறாங்க.. ஜடேஜா மேல திணிக்க முடியுமா? – அஸ்வின் பேட்டி

0
139
Ashwin

இந்திய கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வினை எல்லோரும் சயின்டிஸ்ட் என அழைக்கும் அளவுக்கு, கிரிக்கெட் குறித்து அவர் பல நுணுக்கமான விஷயங்களை சிந்திக்க கூடியவராகவும், கிரிக்கெட் களத்தில் ஏற்படும் நெருக்கடிகளுக்கு தீர்வை கண்டறிய கூடியவராகவும் இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட சிந்தனை கொண்டவராக இருந்தாலும் அவருக்கு இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்புகள் இதுவரைக்கும் தரப்படவில்லை. அதே சமயத்தில் அவர் 2018 மற்றும் 19 ஆம் ஆண்டுகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தி இருக்கிறார். அதில் 28 போட்டிகளில் 12 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்.

- Advertisement -

பொதுவாக ரவிச்சந்திரன் அஸ்வின் தனது பந்துவீச்சிலும், கேப்டன்ஷியிலும் நிறைய முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார், இதன் காரணமாகத்தான் அவரால் கேப்டன் பொறுப்பில் வெற்றி பெற முடியவில்லை. அதிக முயற்சிகளை செய்து கொண்டே இருப்பது கேப்டன் பொறுப்புக்கு சரி வராது என்கின்ற பிம்பம் அவர் மேல் விழுந்தது.

தான் ஏன் அதிகப்படியான முயற்சிகளை செய்கிறேன்? என்றும், தன்னால் கேப்டன் பொறுப்பை சரிவர நிர்வகிக்க முடியாதா? தன்னுடைய சிந்தனைகளை அடுத்தவர்கள் மேல் திணிக்க செய்கிறேனா? என்பது குறித்து மனம் திறந்து ரவிச்சந்திரன் அஸ்வின் நிறைய விஷயங்களை பேசி இருக்கிறார்.

என்னால் கேப்டன்சி செய்ய முடியாதா?

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இந்த கிரிக்கெட் சமூகத்தில் எல்லாமே மிக எளிமையாக இருக்கிறது. அது உடைந்தால் மட்டுமே அவர்கள் அதற்கான வேலைகளை செய்கிறார்கள். ஆனால் நான் அது உடையும் முன்பே அதை எப்படி சரியாக தைய்த்து வைத்துக் கொள்வது என்பது குறித்து சிந்திக்கிறேன். ஒன்று நடந்த பிறகு, அது ஏன் நடந்தது என்று யோசிக்க கூடிய ஆள் நான் இல்லை. எனவே மக்கள் ஒரு விஷயம் குறித்து பேசுவதற்கு முன்பாகவே நான் அது குறித்து பேசி விடுகிறேன்.

- Advertisement -

இங்கு எல்லோருக்குமே ஒவ்வொரு பாணி இருக்கும். எனக்கு சரி வரக்கூடிய ஒன்று ரவீந்திர ஜடேஜாவுக்கு சரி வராது. ஏனென்றால் அவர்களுடைய பயணம் வேறு என்னுடைய பயணம் வேறு. ஆனால் அவர்களுக்கு ஐந்து வாய்ப்புகள் கிடைக்கலாம் எனக்கு இரண்டு மட்டுமே கிடைக்கும். எனவேதான் நான் அதை தக்க வைத்துக் கொள்வதற்கு நிறைய முயற்சிகள் செய்கிறேன். எனக்கு இரண்டு வாய்ப்புகள் தான் கிடைக்கும் என்பதையும் நான் ஏற்று சமாதானம் அடைந்து விட்டேன்.

இதையும் படிங்க : ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இணையும் தேதி அறிவிப்பு.. தாமதமாக காரணம்.. முழு விபரம்

நான் கேப்டன் பொறுப்புக்கு வந்தால் என்னுடைய செயல்முறைகளை மாற்றுவேன் என்பது கிடையாது. அதேபோல் ஜடேஜாவிடம் சென்று அவரை மாற்ற வேண்டும் என்றும் சொல்ல மாட்டேன். நான்அவ்வளவு முட்டாள் கிடையாது. ஆனால் மக்கள் நான் என்னுடைய யோசனைகளை மற்றவர்கள் மேல் திணிக்க கூடியவன், இதனால் நான் கேப்டன் பொறுப்புக்கு சரி வர மாட்டேன் என்று நினைத்தார்கள். இது நிச்சயம் நியாயமே இல்லாத மதிப்பீடு” என்று கூறியிருக்கிறார்.