2025 ஐபிஎல் மெகா ஏலம்.. இத செய்யற டீம்தான் பைனல் போகும் கப் ஜெயிக்கும் – அஸ்வின் கணிப்பு

0
833
Ashwin

அடுத்த வருடம் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் எந்த மாதிரி வீரர்களை வாங்கும் அணி சிறப்பாக செயல்படவும் கோப்பையை வெல்லவும் முடியும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.

இந்த வருடம் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் அடுத்த வருடம் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடத்தப்பட இருப்பதாக தெரிகிறது. இதில் அணி நிர்வாகங்கள் எப்படியான வீரர்களின் மீது பணத்தை முதலீடு செய்தால் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

பேட்ஸ்மேன்களும் ஆடுகளமும்

இந்த வருடம் ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்களின் அணுகுமுறை மிகவும் அதிரடியாக மாறியிருக்கிறது. இம்பேக்ட் பிளேயர் விதியால் ஒரு கூடுதல் பேட்ஸ்மேன் கிடைப்பது இதற்கு காரணமாக இருந்தால் கூட, பொதுவாகவே டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக அணுகும் முறைக்கு வந்து இருக்கிறார்கள்.

அதே சமயத்தில் ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கிறது. எனவே சராசரியான பேட்ஸ்மேன்களைக் கொண்டே நல்ல ஸ்கோருக்கு சென்று விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதை வைத்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் அணிகளுக்கு முக்கியமான விஷயம் ஒன்றை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஏலத்தில் இவர்களை வாங்க வேண்டும்

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது ” தற்போது இம்பேக்ட் பிளேயர் விதி இருக்கிறது கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் கிடைக்கிறார், மேலும் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கிறது, இதன் காரணங்களால் எப்படியும் சராசரியான பேட்ஸ்மேன்களை கொண்டே 180 ரண்களுக்கு மேல் சென்று விட முடிகிறது”

இதையும் படிங்க : அயர்லாந்து ODI.. ஃபீல்டிங் செய்த தென் ஆப்பிரிக்க கோச் ஜேபி டுமினி.. அரிய நிகழ்விற்கு காரணம் என்ன.?

“எனவே ஐபிஎல் மெகா ஏலத்தில் நல்ல பவுலர்களை வாங்க முயற்சி செய்ய வேண்டும். அப்படி நல்ல பவுலர்களை வாங்கினால் ரன்னை கட்டுப்படுத்தி வெற்றி பெற முடியும். எனக்குத் தெரிந்து சில அணிகள் இரண்டு பவுலர்களை வைத்துக்கொண்டு, மீதி மூன்று பவுலர்கள் சரியாக இல்லாமல் எவ்வளவு ரன் அடித்தாலும் தோற்றார்கள். எனவே எந்த அணி இந்த முறை ஏலத்தில் நல்ல பவுலர்களுக்கு செலவு செய்கிறதோ, அந்த அணி அடுத்த மூன்று வருடம் ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -