அவர் எங்ககிட்ட சொல்லாம போய் அத செஞ்சார்.. அவர் கூட ஆடறது எனக்கு பெருமையா இருக்கு – அஸ்வின் பாராட்டு

0
365
Ashwin

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை இரண்டுக்கு ஒன்று என கைப்பற்றியது. இந்த போட்டியில் தொடர் நாயகன் விருது பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் வெற்றிக்கான காரணங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

தனிப்பட்ட முறையில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இரண்டு போட்டிகள் கொண்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக அமைந்திருக்கிறது. மேலும் அவர் அணியின் வெற்றிக்கு பெரிய பங்களிப்பை கொடுத்து தொடர் நாயகன் விருதையும் என்று இருக்கிறார்.

- Advertisement -

சென்னை சேப்பாக்கத்தில் சம்பவம்

இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் 6 விக்கெட்டுகளை 144 ரன்களுக்கு இழந்து தடுமாறிய பொழுது ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளே வந்து அபாரமாக விளையாடி சதம் அடித்தார். மேலும் இரண்டாவது இன்னிங்ஸ் பந்துவீச்சில் 5 விக்கெட் கைப்பற்றினார். அவர் இந்த தொடரில் அமைத்துக் கொடுத்த தொடக்கம் இந்திய அணிக்கும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.

இந்த தொடரின் வெற்றி குறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “அணியின் வெற்றிக்கு பங்களித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானது. எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சூழலில் நல்ல வெற்றி. அவர்களை என்பது ஓவர்களில் ஆல் அவுட் செய்ய ரோஹித் ஆர்வமாக இருந்தார். பின்பு அவர்கள் ஆல் அவுட் ஆக, யாரிடமும் எதுவும் சொல்லாமல் உள்ளே சென்ற ரோஹித் இரண்டு சிக்ஸர்கள் அடித்து தொனியை அமைத்துக் கொடுத்தார்”

- Advertisement -

இவருடன் விளையாடுவது பெருமையானது

மேலும் பேசி ரவிச்சந்திரன் அஸ்வின் “ரோகித் அமைத்துக் கொடுத்ததை எல்லோரும் பின் தொடர்ந்தார்கள். எங்கள் பௌலிங் யூனிட் குறித்து பெருமையாக இருக்கிறது. பும்ரா மற்றும் சிராஜ் பந்தை வீசும் விதம் மற்றும் ஆகாஷ் தீப் வெளிவந்திருக்கும் விதம் எல்லாம் சிறப்பானது. மேலும் ஜடேஜா உடன் இணைந்து விளையாடுவது பெருமையாக ஒன்று”

இதையும் படிங்க : அஸ்வின் ஜடேஜா செஞ்ச ஒரு விஷயத்தை.. நாங்க 11 பேரும் செய்யல.. தோல்விக்கு காரணம் இதான் – நஜ்முல் சாந்தோ பேட்டி

“நான் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அதிகம் கேரம் பந்துகளை பயன்படுத்துவது போல சிவப்பு பந்து கிரிக்கெட்டில் பயன்படுத்துவது கிடையாது. நான் என்னுடைய ரிதத்தில் செட்டில் ஆவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். நான் கொண்டுவரும் வேரியேஷன்கள், மற்ற சுழல் பந்துவீச்சாளர்கள் கூறுவது போல ஒரு சிறந்த ஸ்பெல்லை உருவாக்குவதையும், நல்ல ரிதத்தில் இருப்பதையும் பற்றியது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -