பங்களாதேஷ் அணி இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து பங்களாதேஷ் அணியின் கேப்டன் நஜ்முல் சாந்தோ பேசியிருக்கிறார்.
இந்தியா வருவதற்கு முன்பாக பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இப்படியான நிலையில் மிகுந்த நம்பிக்கையோடு பங்களாதேஷ் அணி இந்தியாவிற்கு வந்தது.
இரண்டாவது போட்டியில் நடந்த ஆச்சரியம்
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் மட்டுமே 34 ஓவர்கள் பந்து வீசப்பட்டது. அடுத்த இரண்டு நாட்கள் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. மொத்தம் ஏறக்குறைய 235 ஓவர்கள் இழக்க வேண்டி இருந்தது. இப்படி இருந்தும் பங்களாதேஷ் அணி இந்திய அணியிடம் மீதி ஒரு செஷன் இருக்கும் பொழுது தோல்வி அடைந்தது, அந்த அணியை வெகுவாக பாதித்திருக்கிறது.
பங்களாதேஷ் அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என எல்லாமே மிக வலிமையாக பாகிஸ்தான் தொடரில் காணப்பட்டது. இந்த நிலையில் நிச்சயம் இந்திய அணிக்கு பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடர் சாதாரணமாக இருக்காது என இந்திய தரப்பிலேயே முன்னாள் வீரர்கள் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்வின் ஜடேஜா செய்தது
இந்த தோல்வி குறித்து பங்களாதேஷ் அணியின் கேப்டன் நஜ்முல் சாந்தோ பேசும் பொழுது ” எங்கள் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது எதுவென்றால் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. எங்களுடைய பேட்ஸ்மேன் எல்லோருமே 30, 40 பந்துகளை மட்டுமே சந்தித்து ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்”
இதையும் படிங்க : 100 ரன்னுக்கு ஆல் அவுட் ஆக தயாரா இருந்தேன்.. ரிஸ்க் எடுக்க நினைச்ச காரணம் இதுதான் – ரோகித் சர்மா பேட்டி
“இந்திய அணியில் பார்த்தால் முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா மிகச்சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். அந்த போட்டியில் பெரிய வித்தியாசமாக அவர்களுடைய பேட்டிங் அமைந்தது. அப்படியான தருணங்களில் நாம் விக்கெட் வீழ்த்த வேண்டும். நாங்கள் அந்த வகையிலும் சிறப்பாக செயல்படவில்லை. மெகதி ஹாசன் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.