தற்போது உத்திர பிரதேஷ் லக்னோ ஏகனா மைதானத்தில் இரானி டெஸ்ட் கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் மும்பை அணிக்காககேப்டன் ரகானே, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து அசத்தியிருக்கிறார்கள்.
இரானி கோப்பை ஆண்டுதோறும் ரஞ்சி தொடரை வென்ற சாம்பியன் அணிக்கும், மீதம் இருக்கும் இந்திய வீரர்களைக் கொண்ட ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கும் இடையே டெஸ்ட் கிரிக்கெட் வடிவில் நடைபெறும் தொடராகும்.
ருதுராஜ் – ரகானே
கடந்த ஆண்டு ரஞ்சி டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ரகானே தலைமையிலான மும்பை அணியும், ருதுராஜ் தலைமையிலான ரெஸ்ட் ஆப் இந்தியா அணியும் மோதிக் கொள்ளும் இரானி கோப்பை போட்டி இன்று துவங்கியது. இந்த போட்டிக்கான நாட்டில் வென்ற ருதுராஜ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்ய வந்த மும்பை அணிக்கு நட்சத்திர வீரர் பிரிதிவி ஷா 6, ஆயுஷ் 19, ஹர்திக் தாமோர் 0 என மூவரும் விக்கெட்டையும் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் கைப்பற்றினார். முதல் மூன்று விக்கெட்டுகளை சீக்கிரத்தில் இழந்ததால் மும்பை அணி நெருக்கடியில் சிக்கியது.
அசத்திய மும்பை நட்சத்திர மூவர் கூட்டணி
இதற்கு அடுத்து கேப்டன் ரகானே மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் ஜோடி சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக சரிவில் இருந்த மும்பை அணியை மீட்டார்கள். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி 170 பந்தில் 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 84 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதைத்தொடர்ந்து ரகானே மற்றும் சர்பராஸ் கான் இருவரும் ஜோடி சேர்ந்தார்கள். இந்த ஜோடி ஆட்டம் இழக்காமல் இறுதிவரை களத்தில் நின்று 176 பந்துகளில் 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. 68 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 237 ரன்கள் எடுத்திருந்தபோது வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரகானே 86*, சர்பராஸ் கான் 54 ரன்களுடன் களத்தில் நிற்கிறார்கள்.
இதையும் படிங்க : டீம் மீட்டிங்கில் இதைத்தான் பேசினோம்.. கம்பீர் ரோகித் பாய் எனக்கு நல்ல ஐடியா தந்தாங்க – ஜெய்ஸ்வால் பேட்டி
இந்திய அணியில் நேற்று வரை இருந்த சர்பராஸ் கான் மும்பை அணிக்கும், யாஸ் தயால்மற்றும் துருவ் ஜுரல் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கும் இன்று விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடி ஆட்டம் இழக்காமல் அரைசதம் அடித்து களத்தில் நிற்கிறார்