“நான் சிஎஸ்கேவுக்கு போனப்ப.. முரளிதரன் அதை செய்ய விரும்பல.. அந்த வாய்ப்புதான்..” – அஷ்வின் பேட்டி

0
133
Ashwin

இன்று இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாளில் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 500 வது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார்.

இதனை எடுத்து அவருக்கு இந்தியா தாண்டி உலகம் முழுவதிலும் இருந்து நிறைய வாழ்த்துக்கள் புரிந்து கொண்டிருக்கிறது. அவருடைய சக போட்டியாளரான ஆஸ்திரேலியாவின் ஆப் ஸ்பின்னர் நாதன் லயன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொலைக்காட்சியில் ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்பத்தாரும் தங்களுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்திருக்கிறார்கள். மேலும் தமிழக வீரர்கள் பலர் தங்களுடைய மேலான மதிப்பான வாழ்த்துக்களை வழங்கி இருக்கிறார்கள்.

நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் முக்கியமான 37 ரன்கள் எடுத்து, மேலும் நூறு ரன்களை நெருங்கிக் கொண்டிருந்த துவக்க பார்ட்னர்ஷிப்பை இங்கிலாந்துக்கு முடித்து வைத்து அஸ்வின் ஜாக் கிரவுலி விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.

இன்றைய போட்டி முடிவுக்குப் பிறகு பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின் ” நான் முதன் முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குள் நுழைந்த பொழுது, அணியில் இருந்த முத்தையா முரளிதரன் புதிய பந்தில் பந்து வீச விரும்பவில்லை. எனவே எனக்கு புதிய பந்தில் பந்து வீசும் வாய்ப்பு அப்படித்தான் வந்தது.

- Advertisement -

நான் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடிய பொழுது, நான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வருவேனா என மக்கள் சந்தேகப்பட்டார்கள். மேலும் முதலில் நான் ஒரு பேட்ஸ்மேனாக வரத்தான் விரும்பினேன். நான் சுழல் பந்துவீச்சாளராக வந்தது ஒரு விபத்தான முடிவு என்று தான் கூற வேண்டும்.

இது வழக்கமான ராஜ்கோட் ஆடுகளம். இந்த ஆடுகளத்தில் இருக்கும் வெடிப்புகள் பெரிதாக ஆரம்பித்தால்தான் ஏதாவது பந்து வீச்சுக்கு சாதகம் இருக்கும். இல்லையென்றால் இந்த ஆடுகளம் தொடர்ந்து பேட்டிங் செய்யவே சாதகமாக இருக்கும்.

இதையும் படிங்க : “எனக்கு பெருமையே நீங்கதான்.. உங்ககிட்டதான் கத்துக்கறேன்” – நாதன் லயன் அஸ்வினுக்கு பாராட்டு

பென் டக்கெட் 60, 70 ரன்கள் எடுத்திருக்கும் பொழுது மிகவும் வித்தியாசமான ஒரு வீரர். அவருடைய ஸ்லாக் ஸ்வீப் அற்புதமானது. அவர் இன்று சதம் அடித்த பொழுது நான் கைத்தட்ட வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் செய்யவில்லை. அவர் செயல்பட்ட விதத்திற்கு மகிழ்ச்சி” என்று கூறி இருக்கிறார்.