இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர் தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து அணியின் அணுகுமுறை குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஸ்டுவர்ட் பிராட் ஆஸ்திரேலியா அணி கடந்த 15 ஆண்டுகளை விட இந்த முறை வலிமை குறைந்து காணப்படுவதாகவும் இங்கிலாந்து அணி பெரிய வலிமையோடு இருப்பதாகவும் கூறி இருந்தார். ஆனால் டெஸ்ட் தொடர் தொடங்கிய பிறகு நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது.
வலிமை குறைவாக கருதப்பட்ட ஆஸ்திரேலிய அணி முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று பாரம்பரியமான ஆசஸ் டெஸ்ட் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இதில் இங்கிலாந்து அணி வலிமையாக இருந்த போதிலும் பேஸ் பால் என்னும் அணுகுமுறையை அவர்கள் சரியாக கடைபிடிக்கத் தவறியதால் இந்த பெரிய தோல்வி ஏற்பட்டு இருப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கருதுகிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இங்கிலாந்து அணி ஆட்ட முறையை புரிந்து கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன். நாங்கள் ஆக்ரோஷமாக விளையாடுவோம் பேட்டிங்கில் அதிரடி காட்டுவோம் என்று இங்கிலாந்து அணி சொல்கிறது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் தயாராகியுள்ளனர். ஆனால் அழுத்தத்தில் விளையாடும் போது இதே வகையான அணுகு முறையில் விளையாட முடியுமா அல்லது ஆக்ரோஷமாக பேட்டிங் ஆட முடியுமா என்பது தான் கேள்வி.
இதையும் படிங்க:கௌதம் கம்பீர் ஒரு மெசேஜ் சொல்றார்.. பெரிய வீரர்கள் கவனமா இருக்கணும்.. டி20 WC குறித்து முன்னாள் வீரர்
எனது கேள்வி எப்படிப்பட்டது என்றால் உண்மையான வீரவேசத்திற்கும் பொய்யான வீர வேஷத்திற்கும் இடைப்பட்டது. நீங்கள் தவறான வழியில் ஆக்ரோசமாக விளையாடினால் அது கேலிக்கூத்தாகும். பெரிய அசிங்கமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட பாணிலான ஆட்டத்தை சந்தை படுத்த முடியும். இங்கிலாந்து கோச் மெக்கெல்லாம் ஒரு அருமையான கருத்தை கூறினார். நான் வீரர்களிடமிருந்து அழுத்தத்தை விடுவிக்க விரும்பினேன் என்று பேசி இருந்தார். இரண்டாவதாக நாங்களும் குற்றவாளிகள் தான் என்று கூறினார். அவரது பாணியில் அவரது பயிற்சியை சரியாக செய்கிறார்” என்று அஸ்வின் பேசியிருக்கிறார்.