இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்காண இந்திய அணியை அறிவித்தது.
இந்த இந்திய அணி அறிவிப்பு குறித்து இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரான மாண்டி பனேசர் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இந்தியாவில் வருகிற பிப்ரவரி மாதம் டி20 உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில் நடப்பு சாம்பியன் இந்திய அணி இந்த தொடரில் கலந்து கொள்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்திய அணியை அறிவித்தது. இதில் எதிர்பாராத விதமாக துணை கேப்டனாக இருந்த சுப்மன் கில் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இந்திய உள்நாட்டு தொடரில் கலக்கிய இஷான் கிஷான் வாய்ப்பு பெற்று இருக்கிறார்.
மேலும் அவரது தொடக்க இடத்திற்கு திரும்பவும் சஞ்சு சாம்சன் விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரான மாண்டி பனேசர், இது குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்இது குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார். அதாவது கௌதம் கம்பீர் எப்போதுமே பயமற்ற அணுகு முறையை மேற்கொள்பவர் எனவும் எப்போதுமே அதை தெளிவாக பின்பற்றி இருக்கிறார் என்று பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் உங்கள் ஆட்டம் சிறப்பாக இல்லை என்றால் நான் பயப்பட மாட்டேன், உங்களை அணியில் இருந்து நீக்கி விடுவேன் என்கிற செய்தியை கௌதம் கம்பீர் அணி வீரர்களுக்கு அனுப்பியிருக்கிறார். இது ஒரு நல்ல செய்தி என்று நினைக்கிறேன். ஏனென்றால் இந்தியாவில் இருக்கும் அனைத்து பெரிய வீரர்களும் இதுகுறித்து சிந்திப்பார்கள் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க:ஒல்லியா காட்ட முயற்சி பண்ணாதீங்க.. அதனால பாதிக்கப்பட்டவங்கள தெரியும் சொல்ல மாட்டேன் – அமித் மிஸ்ரா பேச்சு
அடுத்த முறை நமக்கு இந்த நிலை வந்து விடக்கூடாது என்று நினைப்பார்கள். ஏன் சூரியகுமார் யாதவ் கூட இது குறித்து சிந்திக்க கூடும். இது ஒரு சிறப்பான விஷயமாகும். நான் முன்பே சொல்லி இருக்கிறேன், கௌதம் கம்பீர் சரியான முடிவை எடுப்பார் அணிக்கு சரியான முடிவை எடுக்க கூடியவர். நீங்கள் பெரிய வீரராக இருந்தாலும் அல்லது சிறிய வீரராக இருந்தாலும் சரி நல்ல பார்ம் இல்லை என்றால் அவர் உங்களை அணியில் தேர்வு செய்ய மாட்டார். கில் பார்ம் நன்றாக இல்லை என்ற சந்தேகம் எனக்கு முன்பே இருந்தது. எனவே கம்பீர் சரியான முடிவை எடுத்திருக்கிறார்” என்று தான் கூறுவேன் என்று பேசி இருக்கிறார்.






