இந்திய கிரிக்கெட்

இந்திய அணியை ஜெயிக்க ஐடியா தரேன்.. இங்கிலாந்து நீங்க இத செஞ்சா மட்டும்தான் முடியும் – அஸ்வின் அறிவுரை

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எந்த மாதிரியான அணுகுமுறையை வெளிப்படுத்தினால் இந்திய அணியை வெல்ல முடியும்? என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவுரை கூறியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணிக்கு எதிராக இந்தியாவில் விளையாடிக் கொண்டு வருகிறது. இதில் கொல்கத்தா மற்றும் சென்னையில் நடந்த முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் செய்த தவறால் அந்த அணி தோல்வி அடைந்தது. இன்று மூன்றாவது போட்டி குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் நடக்கிறது.

மெக்கலம் வழியில் இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணி

இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த நியூசிலாந்தின் முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கலம் தற்போது இங்கிலாந்தின் வெள்ளைப்பந்து அணிகளுக்கும் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கிறார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து டெஸ்ட் அணியில் கொண்டு வந்த பாஸ்பால் அதிரடி அணுகுமுறையை இங்கும் புகுத்தி இருக்கிறார்.

இதன் காரணமாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கடைசி வரையில் முதல் பந்தில் இருந்தே அடிக்க நினைக்கிறார்கள். இந்தியாவில் தரமான சுழல் பந்துவீச்சுக்கு எதிராக அவர்கள் முதல் பந்தில் இருந்து அடித்து விளையாட செல்வது அவர்கள் விக்கெட் இழக்க முக்கிய காரணமாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவுரை

இது குறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் கூறும் பொழுது “இங்கிலாந்து அணி முழுமை அடையாத கிரிக்கெட்டை விளையாடியது. அவர்கள் தொடர்ந்து தவறுகள் செய்தார்கள். மேலும் நீங்கள் இந்தியாவில் விளையாடும் பொழுது ஒரே டெம்போவில் விளையாட முடியாது. நீங்கள் பெங்களூரு டிராபிக்கில் வண்டி ஓட்டினால் நான்காவது கியரில் ஓட்ட முடியாது. இதேதான் நீங்கள் இந்தியாவில் விளையாடும் பொழுதும் அதிரடியாக நான்காவது கியரில் விளையாட முடியாது”

இதையும் படிங்க : 12 ஆண்டுகள் கழித்து ரஞ்சியில் விராட் கோலி.. டிவியில் ஒளிபரப்பப்படாதது ஏன்?.. வெளியான காரணங்கள்

“இதைத்தான் நான் கடந்த முறையும் சொல்லி இருந்தேன். இந்தியாவில் பயமாற்ற கிரிக்கெட் முறை தேவையானது. ஆனால் அது பவர் பிளேவில் மட்டும் இருக்க வேண்டும். இதைத் தொடர்ந்து நீங்கள் கண்டிஷனுக்கு தகுந்தபடி விளையாட வேண்டும். நீங்கள் என்னதான் அதிரடியாக விளையாடினாலும் கூட, கிரிக்கெட்டின் ராஜா கண்டிஷன்தான். நீங்கள் அதற்கு மதிப்பு கொடுத்தே ஆக வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts