ஜெய்ஸ்வால் ஸ்ரேயாஸ் சுயநலமா ஆடனும்?.. முதல்ல நடந்த ரேஸே வேற.. மொத்தமா ஏமாத்திட்டாங்க – அஸ்வின் விமர்சனம்

0
48
Ashwin

இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சுயநலம் இல்லாமல் விளையாடக்கூடிய வீரர்கள் என்றும் அவர்களுக்கு வாய்ப்பு தராதது வேறு மாதிரியான தாக்கத்தை உண்டாக்கிவிடும் எனவும் ரவிச்சந்திரன் அஸ்வின் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

நேற்று அறிவிக்கப்பட்ட ஆசியக் கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவதற்கு சுப்மன் கில்லை விட அதிக தகுதிகள் இருக்கும் ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் தேர்வு செய்யப்படவில்லை. தற்போது இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தனது காட்டமான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

2023 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடரில் துவக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் அறிமுகமானார். ஆனால் அப்பொழுது நடைபெற்ற டி20 தொடருக்கு முதலில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. கில்லுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் சரியாக விளையாடாததால் உடனே அடுத்து ஜெய்ஸ்வாலுக்கு நடுவிலேயே வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

மேலும் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின் போது மூன்றாவது துவக்க ஆட்டக்காரருக்கான இடம் கில்லுக்கு கொடுக்கப்படவில்லை. அவர் காத்திருப்பு வீரர் பட்டியலில் மட்டும் இருந்தார். ஆனால் ஜெய்ஸ்வாலுக்கு நேரடியாக இந்திய அணியில் இடம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் ஜெய்ஸ்வால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். மேலும் கில்லை விட சிறப்பான செயல்பாடு கொண்ட ஸ்ரேயாஸ் ஐயரும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

இனி சுயநலமாக விளையாடனுமா?

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “இந்திய டி20 அணிக்கான ரேஸில் முதலில் ஜெய்ஸ்வால் அதற்கு அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் மூன்றாவது இடத்தில்தான் கில் இருந்தார். இதில் ஜெயஸ்வால் ஐபிஎல் தொடரில் கேப்டன் ஆகவும் தன்னை நிரூபித்தவராக இருக்கிறார். இந்த நிலையில்தான் ரேசில் பின்தங்கி இருந்த கில்லுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது”

இதையும் படிங்க: இந்திய வீரர்களில் அவரை பற்றி யோசித்து வாய் விடுங்க.. 28 ஓவரில் ஆசிய கோப்பை இருக்கு – முகமது கைப் வேண்டுகோள்

“மேலும் ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சுயநலமில்லாமல் தைரியமாக விளையாட கூடியவர்கள். அவர்கள் அரை சதத்திற்கு பக்கம் இருந்தாலும் சிங்கிள் எடுத்து விளையாட மாட்டார்கள். அணிக்காக ரிஸ்க் எடுத்து காற்றில் அடிக்க பார்ப்பார்கள். இப்போது இப்படி செய்திருப்பதால் இனி அவர்கள் தங்களுக்காக விளையாட வேண்டுமா என அணிக்காக விளையாட வேண்டுமா? என்று யோசிக்க வேண்டிய நிலை உருவாகி விடும். அந்த நிலையை தற்போது உருவாக்கி விட்டார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -