இந்திய டி20 அணியில் துவக்க வீரருக்கான இடத்தில் ருதுராஜுக்கு ஏன் வாய்ப்பு கிடைப்பதில்லை என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம் அளித்து பேசி இருக்கிறார்.
தற்போது இந்திய t20 அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் விளையாடு வருகிறார்கள். 2026 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு இவர்களே தொடக்க ஆட்டக்காரர்களாக தொடர்வார்களா? என்பது இன்னும் உறுதி செய்யப்படாததாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
ருதுராஜுக்கு நடந்த சோகம்
இந்திய டி20 அணியில் அபிஷேக் ஷர்மா வாய்ப்பு பெற்று விளையாடுவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் ருதுராஜ் சதம் அடித்தார். அப்படி இருந்த பொழுதும் கூட இந்திய தேர்வு குழு அவருக்கு மீண்டும் இந்திய டி20 அணியில் தொடக்க இடத்தை கொடுக்கவில்லை. ஆச்சரியப்படுத்தும் விதமாக கில்லை கொண்டு வந்தது.
பிறகு இதில் நேரம் இருக்கும் பொழுது ஜெய்ஸ்வால் விளையாடினார். அடுத்து சில போட்டிகளாக தொடர்ந்து அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் விளையாடுகிறார்கள். ஆரம்பத்தில் 15 பேர் கொண்ட இந்திய டி20 அணியில் தேர்வு செய்யப்பட்ட ருதுராஜ் பிறகு அதிலும் தேர்வு செய்யப்படாமல் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.
வாய்ப்பு கிடைக்காத காரணம் இதுதான்
இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” இந்தியாவின் டாப் ஆர்டர் நிரம்பி இருக்கிறது. இப்பொழுது கில், ஜெய்ஸ்வால், ருதுராஜ் என பலர் வெளியே இருக்கிறார்கள். இதில் சிலர் ஒருநாள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். சிலர் திட்டத்திலேயே கிடையாது. ருதுராஜ் தன்னுடைய கடைசி டி20 தொடரில் சதம் அடித்தார். மேக்ஸ்வெல் பந்துவீச்சை அடித்து நொறுக்கி இருந்தார்”
இதையும் படிங்க : ஷாகின் அப்ரிடியா கூட இருக்கட்டும்.. இனி பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இதை செய்யணும் – கோச் அகிப் ஜாவேத் அதிரடி
“இப்படியான சூழ்நிலையில் துவக்க வீரர்களுக்கான இரண்டு இடத்தில் ஒரு இடத்தை சஞ்சு சாம்சன் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்யக்கூடியவராக இருந்து இரண்டு சதங்கள் அடித்ததின் மூலமாக துவக்க ஆட்டக்காரர் இடத்தை சீல் செய்து விட்டார். இன்னொரு பக்கம் அபிஷேக் ஷர்மா மீது பெரிய அழுத்தம் உருவாகியது. இது அவருக்கு நன்றாக தெரியும். ஆனால் அணி நிர்வாகம் சுதந்திரமாக விளையாட அனுமதி அளித்ததை எடுத்துக்கொண்டு தற்பொழுது அவரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே ருதுராஜுக்கு வாய்ப்பு அமையவில்லை” என்று கூறியிருக்கிறார்.