பாகிஸ்தான் அணியின் தற்போதைய பயிற்சியாளர் அகிப் ஜாவேத் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு அதிரடியான ஒரு உத்தரவை தற்போது அறிவித்திருக்கிறார். இது எந்த அளவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பலனளிக்கும் என்று பார்க்க வேண்டும்.
தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்திருந்த வெளிநாட்டு பயிற்சியாளர்கள் விலகிக் கொள்ள, பாகிஸ்தான் முன்னாள் வேகபந்துவீச்சாளர் அகிப் ஜாவேத் பயிற்சியாளராக கொண்டுவரப்பட்டிருக்கிறார். மேலும் இவரது பயிற்சி மிகவும் கட்டுப்பாட்டுடன் இருப்பதுடன், உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து வீரர்களை கொண்டு வரும் முறையும் சிறப்பாக மாறி இருக்கிறது.
தென் ஆப்பிரிக்க தொடரில் விளையாடாத ஷாகின் அப்ரிடி
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி விளையாடவில்லை. அந்தத் தொடருக்கு முன்பாகவே பாகிஸ்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்புகள் இருந்து வெளியேறி விட்டதாலும், சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகவும் அவர் அந்த தொடரில் பங்கேற்கவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பேசியிருக்கும் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் அகிப் ஜாவேத் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கியிருக்கிறார்.
இனி இதை செய்ய வேண்டும்
இதுகுறித்து அகிப் ஜாவேத் பேசும்பொழுது “ஷாகின் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. அவர் விளையாடி இருந்தால் முகமது அப்பாஸ் விளையாடியிருக்க மாட்டார். அவர் சிறப்பாக பந்துவீசி போட்டியை நல்ல சுவாரசியமான கட்டத்திற்கு எடுத்துச் சென்றார். மேலும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்கு திரும்பியிருந்தார். டெஸ்ட் போட்டிக்கு முன்பாக எங்கள் வீரர்கள் லீக் போட்டி விளையாட முடிந்தால், அவர்கள் நான்கு நாள் போட்டியையும் விளையாடி விட்டு வர வேண்டும்”
இதையும் படிங்க : அணியில் இடம் நிரந்தரமா தெரியாது? 6 மாதம் இந்த பயிற்சி செஞ்சிட்டு வரேன் – வருண் சக்கரவர்த்தி பேட்டி
“டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் நீங்கள் அதிகம் பந்து வீச வேண்டியது இருக்கும். நீங்கள் தொடர்ந்து மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுகிறீர்கள் என்றால், மூன்று நான்கு மாதங்கள் இடைவெளியில் திடீரென வந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 20 முதல் 25 ஓவர்கள் பந்து வீசுவது கடினம். இங்கு உங்களுக்கு பெரிய அளவில் ஆற்றல் இழப்பு ஏற்படும். எனவே நீங்கள் டெஸ்ட் போட்டிக்கு திரும்புவதற்கு முன்பாக நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி போட்டிகளில் விளையாடுவது அவசியம்” என்று கூறி இருக்கிறார்.






