தற்போது சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அவரது நண்பர் மற்றும் கிரிக்கெட் பயிற்சியாளர், பகுப்பாளர் பிரசன்னாவால் அவருக்கு புதிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.
இந்திய முன்னால் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான் விளையாடி வந்த காலகட்டத்திலும் யூட்யூபில் மிகவும் பரபரப்பாக இயங்கி வரக்கூடியவராக இருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு விளையாடி வரும் நிலையில், அவருடைய யூடியூப் சேனலில் அவருடைய நண்பர் பிரசன்னா பேசி வருகிறார்.
பிரசன்னாவின் சர்ச்சையான கருத்து
சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டிக்கு பிறகு அஸ்வினின் யூடியூப் சேனலில் பேசிய பிரசன்னா ஜடேஜா மற்றும் அஸ்வினை வாங்கி விட்ட பிறகு சிஎஸ்கே அணி சிறப்பாக செயல்பட்ட போதிலும் நூர் அகமதை வாங்கி இருக்கக் கூடாது என்று கூறினார். மேலும் பதிரனா இருக்கும் வரையில் வெற்றி பெறுவது கடினம் என்றும் பேசியிருந்தார்.
மேலும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பவர் பிளேவில் ஓவர் தரக்கூடாது என்று தொடர்ந்து கூறி வருகிறார். அவருடைய தவறான கேப்டன்சியின் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் ரன்கள் தரவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார் என்றும், முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு ஓவருக்கு மேல் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தாராதது தவறு என்றும் கூறியிருந்தார்.
ரசிகர்கள் சரமாரி விமர்சனம்
இந்த நிலையில் பொதுவான கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சிஎஸ்கே கிரிக்கெட் ரசிகர்கள் முதலில் ஜடேஜா இருக்கும் பொழுது ரவிச்சந்திரன் அஸ்வினை வாங்கி இருக்கக் கூடாது, நூர் அகமதை வாங்கியதுதான் சரி என்றும், மேலும் தனது நண்பர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்காக ஒருதலைப் பட்சமாக பிரசன்னா பேசக்கூடாது எனவும் கடுமையான விமர்சனங்களை சமூக வலைதளத்தில் முன்வைத்து வருகிறார்கள்.
இதையும் படிங்க : அஷ்வனி குமாருக்கு ஹர்திக் இப்படி செய்திருக்க கூடாது.. நானா இருந்தா விடமாட்டேன் – ஹர்பஜன் சிங் பேச்சு
இந்த நிலையில் பிரசன்னா பேசிய சர்ச்சைக்குரிய வீடியோ தற்பொழுது அஸ்வினின் யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதும், அந்த அணி பலவீனமாக இருப்பது வெளிச்சமாக இருப்பதும், அஸ்வின் நிறைய ரன்களுக்கு செல்வதும் பிரச்சனைகளை உண்டாக்கி இருக்கிறது. இந்த நிலையில் பிரசன்னா பேச்சு அஸ்வினுக்கு தனிப்பட்ட நெருக்கடியை உண்டாக்கி இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்!






