நேற்று ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மும்பை இந்தியன்ஸ் அறிமுக பந்துவீச்சாளர் அஸ்வினி குமாருக்கு குறிப்பிட்ட ஒன்றை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா செய்திருக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இடதுகை வேகப பந்துவீச்சாளர் அஸ்வினி குமார் நேற்று கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுக வீரராக நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். ரகானே, ரிங்கு சிங், மனிஷ் பாண்டே மற்றும் ரசல் என நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐபிஎல் அறிமுகத்தில் முதல் பந்து
இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசும் பொழுது “இன்று அஸ்வினி குமாருக்கு அவருடைய நாளாக அதிர்ஷ்டம் இருந்தது. தன்னுடைய அறிமுக போட்டியில் விளையாடி ஆட்டநாயகன் விருது வெல்ல வேண்டும் என்று எழுதப்பட்டு இருக்கிறது. இவ்வளவு பெரிய அணிக்கு அறிமுக வீரராக வாய்ப்பு கிடைப்பதும், வீசிய முதல் பந்தில் விக்கெட் கிடைப்பது மிகப்பெரிய விஷயம்”
“இது அவருடைய நாள். நான் மும்பை அணியின் கேப்டனாக இருந்திருந்தால் அவருக்கு இன்னும் ஒரு ஓவர் கொடுத்திருப்பேன். அவர் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார் அதை ஐந்தாக மாற்றி இருப்பேன். அவருக்கு இன்னும் ஒரு ஓவர் மட்டும் கிடைத்திருந்தால் உண்மையில் அவர் தனது ஐந்தாவது விக்கெட்டை எடுத்து இருப்பார்”
பத்துக்கு பத்து மார்க் தரேன்
“அவர் ரகானேவின் விக்கெட்டை பெற்றார். ரகானே மிகவும் நம்பகமான ஒரு பேட்டர். ரகானே மற்றும் ரிங்கு சிங் போன்ற பேட்ஸ்மேன் விக்கெட்டை நீங்கள் கைப்பற்றினால் உங்களுடைய நம்பிக்கை விண்ணை தொடும். மனிஷ் பாண்டேவுக்கு அவர் வீசிய பந்து சீமில் விழுந்து உள்ளே வந்தது. பின்பு அவர் ரசல் விக்கெட்டையும் கைப்பற்றினார்”
இதையும் படிங்க : ரோகித் வசமா சிக்கிட்டாரு.. ஹர்திக் பாண்டியா செம செக்.. இனி கஷ்டம் – மைக்கேல் வாகன் கருத்து
“நீங்கள் உங்கள் முதல் போட்டியில் விளையாடும் போதும், நீங்கள் மும்பை மைதானத்தில் பந்து வீசும் போதும் மிகப்பெரிய நெருக்கடி மற்றும் அழுத்தம் இருக்கும். அவர் முதல் பந்தில் விக்கெட் எடுத்த காரணத்தினால் அவருக்கு பதட்டம் செட்டில் ஆகி இருக்கும். நான் அவருடைய பந்து வீச்சுக்கு பத்துக்கு பத்து மதிப்பெண் தருவேன்” என்று கூறியிருக்கிறார்.






