நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய இந்தியா உள்நாட்டு லக்னோ வீரர் முகுல் சவுத்ரியை ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டி இருக்கிறார்.
இந்த போட்டியில் கடைசி நான்கு ஓவர்களில் வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்ட பொழுது, உடன் ஒத்துழைப்பு தருவதற்கு பேட்ஸ்மேன் யாரும் இல்லாத நிலையில், முகுல் சவுத்ரி தனி ஒரு வீரராக இருந்து அதிரடியாக விளையாடி வெற்றியைத் தேடிக் கொடுத்தார்.
ராஜஸ்தானின் திறமை
தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணி மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் அசோக் சர்மாவை ஏலத்தில் வாங்கி வைத்திருக்கிறது. இவர் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிஎஸ்கே வாங்கி இருக்கும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ராஜஸ்தானை சேர்ந்தவர். இத்துடன் முகுல் சவுத்ரியும் ராஜஸ்தானை சேர்ந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்துடன் இந்த மூன்று திறமையான வீரர்களும் ஆரவல்லி கிரிக்கெட் கிளப்பில் இருந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ஐபிஎல் தொடரில் இந்திய உள்நாட்டு இளம் திறமையாளர்களுக்கு உடனடியாக வாய்ப்புகள் கிடைக்கிறது. அவர்களும் உடனடியாக தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அஸ்வின் பாராட்டு
இந்த நிலையில் ஐபிஎல் எப்படியான இளம் திறமையாளர்களை கொண்டு வருகிறது? எதிர்காலத்தில் டி20 கிரிக்கெட்டில் இந்தியா எப்படியான ஒரு சக்தியாக இருக்கப்போகிறது? என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க : தோனி சார்தான் என்னோட குரு.. அவர் செய்கிற அந்த ஒரு விஷயத்தை ஃபாலோ பண்ணி மேட்ச்சை முடிச்சேன் – முகுல் சவுத்ரி பேச்சு
இது குறித்து அவர் பேசும்போது “முகுல் சவுத்ரி நேற்று அசத்தலாக விளையாடினார். ஐபிஎல் ஏலத்தில் லக்னோ உடன் அவரை வாங்குவதற்கான போட்டியில் இருந்தது யார் தெரியுமா? ராஜஸ்தான் ராயல்ஸ்தான் இருந்தது. எதிர்காலத்தில் ஒரு திறமையுடன் விளங்கக்கூடிய வீரரை வாங்கிய லக்னாவுக்கு பாராட்டுகள். முதல் பகுதிகளில் முகுல் சவுத்ரி காட்டிய பொறுமை மற்றும் அமைதி ஐபிஎல் என்பதை பல விதங்களில் எடுத்துக்காட்டுகிறது. இந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை மேலே கொண்டு வருகிறது. அடுத்தடுத்த டி20 உலக கோப்பைகளில் இந்தியா களம் இறக்கும் பேட்டிங் திறமைகள் பயங்கரமாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.






