தோனி சார்தான் என்னோட குரு.. அவர் செய்கிற அந்த ஒரு விஷயத்தை ஃபாலோ பண்ணி மேட்ச்சை முடிச்சேன் – முகுல் சவுத்ரி பேச்சு

0
35
Dhoni

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக லக்னோ அணிக்கு அதிரடி பேட்டிங்கால் வெற்றி பெற்று கொடுத்த முகுல் சவுத்ரி தோனி தன்னுடைய குரு என்று கூறி இருக்கிறார்.

இந்த போட்டியில் 16 ஓவர்களில் லக்னோ அணி 128 ரன் மற்றும் எடுத்து ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இப்படியான நேரத்தில் வெற்றிக்கு மேலும் 54 ரன்கள் தேவைப்பட்டது. அங்கிருந்து தனி ஒரு வீரராக போட்டியை எடுத்து முகுல் சவுத்ரி வெற்றி கொடுத்தார்.

- Advertisement -

ஹெலிகாப்டர் ஷாட்

இந்தப் போட்டியில் அவர் தோனியைப் போல பந்தை மிகவும் வலுவாக அடித்தார். நேற்றைய ஆடுகளத்தில் மெதுவான பந்துகள் மிகவும் வீரியமாக இருந்தது. ஆனால் இவர் தோனி போல பந்தை பார்த்து வலிமையாக அடித்த காரணத்தினால், அந்த மெதுவான பந்துகளில் வீரியம் ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது.

மேலும் நேற்றைய போட்டிகள் இவர் மொத்தம் ஏழு சிக்ஸர்கள் அடித்திருந்தார். அதில் ஒரு சிக்சர் தோனி சர்வதேச கிரிக்கெட்டுக்கு கொண்டு வந்த ஹெலிகாப்டர் ஷாட் முறையில் வந்தது. மேலும் இந்த ராஜஸ்தான் வீரர் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தோனி என்னுடைய குரு

இத்துடன் ஆங்கில கிரிக்கெட் வர்ணனையில் இருந்த அபினவ் முகுந்த் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை பார்த்தே இவர் தானும் அப்படி வரவேண்டும் என்று உருவானவர் என்ற புதிய தகவலையும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : முகுல் சவுத்ரி மேஜிக் பண்ணிட்டார்.. மொத்த பாராட்டும் அவருக்குதான்.. இது கடினமான தோல்வி – ரகானே வருத்தம்

இது குறித்து முகுல் சவுத்ரி பேசும்போது “தோனி எப்படி ஆட்டத்தை முடித்து வைக்கிறார் என்று நான் மிகவும் ஆர்வமாக பார்ப்பேன். நானும் அதைப் பின்பற்றி பேட்டிங் செய்கிறேன். என் ஆரம்ப காலத்தில் அவர்தான் எனக்குத் உத்வேகம் அளித்தார். கொல்கத்தா அணிக்கு எதிரான லக்னோ அணியின் வெற்றியை நான் அவருக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -