இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு.. அஸ்வின் வாஷிங்டன் சுந்தர் படைத்த முதல் சாதனை.. புனே டெஸ்ட்

0
669
Ashwin

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறார்கள்.

இன்று மகாராஷ்டிரா புனே மைதானத்தில் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி தொடங்கியது. இதில் இருவரது அபார பந்துவீச்சின் காரணமாக நியூசிலாந்து அணியை கட்டுப்பாட்டில் வைத்து இந்திய அணி போட்டியையும் கையில் வைத்திருக்கிறது.

- Advertisement -

அச்சுறுத்தலை கொடுத்த நியூசிலாந்து அணி

புனே மைதானத்தைப் பொறுத்தவரை சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் மேலும் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் வெற்றி பெறும் என்பது புள்ளிவிபரமாக இருக்கிறது. இந்த நிலையில் நியூசிலாந்து அணி டாஸ் வென்றது இந்திய அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாக அமைந்தது.

இப்படியான நிலையில் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் கான்வே இந்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் இரண்டாவது போட்டியில் சதம் அடித்த ரச்சின் ரவீந்தரா இந்த போட்டியிலும் அரைசதம் தாண்டினார். நியூசிலாந்து அணி 300 ரன்கள் கடந்தால் இந்திய அணிக்கு பெரிய பிரச்சனை உண்டாகும் என்கின்ற நிலை இருந்தது.

- Advertisement -

காப்பாற்றிய வாஷிங்டன் சுந்தர்

இந்த போட்டியில் டாம் லாதம், கான்வே, வில் யங் என நியூசிலாந்தின் முதல் மூன்று விக்கெட்டுகளை ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்றி இருந்தார். இதற்கு அடுத்து பந்துவீச்சுக்கு வந்த வாஷிங்டன் மீதமிருந்த ஏழு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். மூன்று வருடத்திற்கு பிறகு இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு இது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஐந்தாவது விக்கெட்டாக அமைந்தது.

இதையும் படிங்க : இந்தியா-நியூசி புனே டெஸ்ட்.. வெறும் 100 மில்லி தண்ணீர்.. மோசமான ஏற்பாடு.. ரசிகர்கள் கோபம்

மேலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸின் 10 விக்கெட்டுகளையும் இரண்டு வலதுகை ஆப் ஸ்பின்னர்கள் கைப்பற்றிய வரலாறு இல்லை. ஆனால் இதை வலதுகை ஆப் ஸ்பின்னர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் மாற்றி வரலாற்றை எழுதி இருக்கிறார்கள். இருவரும் நியூசிலாந்தின் முதல் இன்னிங்ஸில் மொத்த 10 விக்கெட்டையும் கைப்பற்றி புதிய சாதனை படைத்திருக்கிறார்கள். மேலும் இருவருமே தமிழக வீரர்கள் என்பதும் தனிச்சிறப்பு!

- Advertisement -