தற்போது இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புனே மைதானத்தில் சரியான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என ரசிகர்கள் கடுமையான குற்றச்சாட்டை கூறி வருகிறார்கள்.
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. மூன்றாவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் வறட்சி
மகாராஷ்டிரா மாநிலத்தில் வறட்சி நிலவி வருகின்ற காரணத்தினால் குடிநீரை கிரிக்கெட் மைதானங்களுக்கு பயன்படுத்துவது தொடர்பாக நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இருந்த போதிலும் கூட கிரிக்கெட் போட்டி நடக்கும் பொழுது அதற்கான குடிநீர் தேவையை சம்பந்தப்பட்ட மைதான நிர்வாகம் செய்து தர வேண்டியது அவசியமாகும்.
இப்படியான நிலையில் தற்போது இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ரசிகர்களுக்கு சரியான முறையில் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்கள்.
ரசிகர்களின் குற்றச்சாட்டு
மகாராஷ்டிரா புனே மைதானத்தில் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இரண்டு மணி நேரத்திலேயே மைதானத்தில் இருந்த குடிநீர் தீர்ந்து விட்டது என்றும், மேற்கொண்டு குடிநீர் வசதியை மைதான நிர்வாகம் செய்து தரவில்லை என்றும், இதனால் 4 வயது மூத்தவர்கள் தண்ணீர் கிடைக்காமல் வெப்பத்தின் காரணமாக மயக்கம் அடைந்தார்கள் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : 267 ரன்.. இங்கிலாந்து அணியை காப்பாற்றிய ஸ்மித்.. கடைசியில் வந்த சிக்கிய பாகிஸ்தான அணி.. 3வது டெஸ்ட்
மேலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வெறும் நூறு மில்லி தண்ணீர் என்பது ரூபாய்க்கு மைதானத்தில் விற்கப்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது. இத்தோடு உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் வாரியம் என்று சொல்லிக்கொண்டு இப்படியான அடிப்படை வசதிகளை கூட செய்து தராதது பெருமைப்படக்கூடிய விஷயம் இல்லை என ரசிகர்கள் கடுமையான விமர்சனத்தை சமூக வலைதளத்தில் முன்வைத்து வருகிறார்கள்