இந்திய கிரிக்கெட்

வேற வழியே இல்ல.. இந்திய அணி ஜெயிக்க.. ரோகித் இந்த முடிவு எடுக்கணும் – ரவி சாஸ்திரி பேட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 26 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆன ரவி சாஸ்திரி ரோஹித் சர்மா குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

கவலை அளிக்கும் ரோஹித்

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணியுடன் இணைந்தார். இந்தத் தொடரில் அவர் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ஒரு போட்டியில் இந்திய அணி தோல்வியும் மற்றொரு போட்டியில் டிராவும் செய்துள்ளது. மேலும் இவரது பேட்டிங் ஃபார்ம் இந்திய அணிக்கு பெரிய கவலையாக இருக்கிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா இதுவரை 19 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார்.

மேலும் நான்காவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் இவரது பேட்டிங் ஃபார்ம் இந்திய அணிக்கு அவசியமாக இருக்கிறது. ரோஹித் சர்மாவோடு விராட் கோலியின் பேட்டிங் செயல்பாடும் இந்திய அணிக்கு நன்றாக இருந்தால் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்படும். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி ரோஹித் சர்மா தாக்குதல் ஆட்டத்தை தொடர வேண்டும் எனவும் எதைப் பற்றியும் கவலைப்பட கூடாது என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ரோஹித் சர்மா ஏன் இதை செய்யக்கூடாது

இது குறித்து ரவி சாஸ்திரி விரிவாக கூறும்போது “கடைசி டெஸ்ட் போட்டியில் நான் ரோகித் சர்மாவை தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குமாறு கூறினேன். ஆனால் கேஎல் ராகுல் தொடக்க இடத்தில் இறங்கி பேட்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது. எனவே தொடக்க வரிசையில் ராகுல் சிறப்பாக விளையாடுவார் என்று நம்புகிறேன். நான் ரோகித் சர்மாவை பார்க்க வேண்டும். ஏனென்றால் அவரது திட்டத்தில் சில மாறுபாடுகள் இருக்கும்.

இதையும் படிங்க:மந்தனா படைத்த மெகா சாதனை.. பவுலிங்கில் ரேணுகா அபாரம்.. வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒருநாள்.. இந்திய அணி சிறப்பான வெற்றி

ஆறாவது வரிசையில் களமிறங்கும் போது அவர் மிக ஆபத்தானவராக இருக்க முடியும். வேறு எதற்கும் கவலைப்படாமல் தாக்குதல் ஆட்டத்தை தொடர்ந்து எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருக்க ரோகித் சர்மா தெளிவான மனநிலையில் இருக்க வேண்டும். தற்காத்து விளையாடுவதா அல்லது தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடுவதாக என்று கேட்டால் ரோஹித் தாக்குதலான ஆட்டத்திலேயே ஈடுபட வேண்டும் என்று கூறுவேன். ரோஹித் சர்மா இயல்பாக லென்த்தை பிக்கப் செய்து அடிக்கக் கூடிய வீரர் என்பதால் அவர் ஏன் தொடக்கத்திலேயே அதுபோன்று விளையாடக் கூடாது. 15 முதல் 20 நிமிடங்களில் அவர் வெளியேறினால் அவர் தனது இயல்பான ஆட்டத்தை ஆட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by