இந்தியா ஆஸி இல்ல.. அந்த அணி அரை இறுதிக்கு வந்தா.. 2 மடங்கு ஆபத்தா மாறும் – ரவி சாஸ்திரி பேட்டி

0
1399

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற 19ஆம் தேதி முதல் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. இதற்காக இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடி தயாராகி வருகிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்த தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்

இந்தியா,ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து என முன்னணி எட்டு அணிகள் பங்குபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் வருகிற 19ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் மிக தீவிரமான முறையில் தயாராகி வருகின்றன. இதில் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளாக இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் கருதப்படுகின்றன.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த சில வருடங்களாக போதுமான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்றாலும் கடந்த சில மாதங்களில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதிலும் தென்னாப்பிரிக்காவில் பாகிஸ்தான் அணி பெற்ற வெற்றி அவர்கள் ஒருநாள் தொடரில் எவ்வளவு வலுவாக இருக்கிறார்கள் என்பதை காட்டி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பாகிஸ்தான் அணி மிக ஆபத்தானது என்று தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இரட்டிப்பு ஆபத்தாக மாறிவிடுவார்கள்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “கடந்த எட்டு மாதங்களாக பாகிஸ்தான் அணி வெள்ளை பந்து கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதிலும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அவர்கள் பெற்ற வெற்றி எவ்வளவு வலுவாக இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. பாகிஸ்தான் அணி தொடக்க வீரராக அய்யூபை தவறவிட்டது. ஆனால் அவர்களது பேட்டிங் ஆலம் மிக வலுவாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.

இதையும் படிங்க:கம்பீர் ஏன் இந்த அநியாயம் பண்றீங்க.. கேஎல் ராகுலுக்கு நீங்க செய்றது நியாயமா? – முன்னாள் தேர்வு குழு தலைவர் கேள்வி

குறிப்பாக சொந்த மண்ணில் அவர்கள் அரை இறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்று நான் கூறுவேன். எனவே அங்கிருந்து யார் ஆட்டமோ அதற்குப் பிறகு அவர்களுடையதுதான். பாகிஸ்தான் அணி மிக மிக ஆபத்தானது அவர்கள் அரை இறுதிக்கு தகுதி பெற்றால் இரட்டிப்பு ஆபத்தாக மாறிவிடுவார்கள்” என்று ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார். கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை தவறவிட்ட நிலையில் ரோஹித் சர்மா தலைமையிலான அணி கோப்பையை கைப்பற்ற ஆர்வமாக இருக்கிறது.

- Advertisement -