இந்திய கிரிக்கெட்

விராட் கம்பீர் செஞ்ச அது ரொம்ப சரியானது.. அதனால இந்தியா தொடரை வெல்லவும் செய்யலாம் – ரவி சாஸ்திரி பேச்சு

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நடைபெற்ற ஒரு விஷயம் இந்திய அணி தொடரை வெல்வதற்கான உற்சாகத்தை கொடுத்திருப்பதாக ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கடைசி விக்கெட் சிறப்பாக விளையாட பாலோ ஆனை தவிர்த்தது. இதன் காரணமாக உடனடியாக பேட்டிங் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போனதால், ஆஸ்திரேலியா அணி சிறப்பாக செயல்பட்டிருந்த போதிலும் போட்டி மழையில் டிராவாக முடிந்தது.

இந்திய ட்ரெஸ்ஸிங் ரூம் கொண்டாட்டம்

இந்தக் குறிப்பிட்ட போட்டியில் ஆகாஷ் தீப் மற்றும் பும்ரா இருவரும் கடைசி விக்கெட்டுக்கு மிகச் சிறப்பாக போராடி 36 ரன்கள் சேர்த்து இந்திய அணி பாலோ ஆன் ஆகாமல் காப்பாற்றினார்கள். மூன்றாவது போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டாமல் போனதற்கு இது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

மேலும் இந்தியா அணி டிரெஸ்ஸிங் ரூம் மூன்றாவது டெஸ்ட் போட்டி முழுவதிலும் மிகவும் சோகமாகவே இருந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்திருந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியும் தவறான வழியில் சென்றதால் அந்த சூழ்நிலை காணப்பட்டது. இப்படியான நிலையில் பாலோ ஆனை போராடி தவிர்த்தது அணிக்குள் உற்சாகத்தை கொண்டு வந்தது. அதை கேப்டன் ரோகித் சர்மா பயிற்சியாளர் கம்பீர் மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஆகியோர் கொண்டாடினர்.

- Advertisement -

இந்திய அணி செய்தது ரொம்ப சரி

இது குறித்து பேசி இருக்கும் ரவி சாஸ்திரி கூறும் பொழுது ” நீங்கள் அந்த நேரத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும். கடைசி விக்கெட் 36 ரன்கள் சேர்த்தது. அந்த முயற்சி என்பதை இந்திய அணியினர் அறிந்திருந்தார்கள். நீங்கள் திரும்ப ஆஸ்திரேலியா டாப் ஆர்டரை பேட்டிங் செய்ய வைக்கிறீர்கள். எனவே இந்த கொண்டாட்டம் மிகவும் முக்கியமானது”

“கொரோனா காலத்தில் இங்கிலாந்தில் பும்ரா மற்றும் சமி இப்படியான ஒரு போட்டியை விளையாடினார்கள். அப்பொழுது 80 அல்லது 90 ரன் பார்ட்னர்ஷிப் அவர்களிடம் வந்தது. நாங்கள் ஒரு கட்டத்தில் அந்த போட்டியில் தோற்கும் நிலையில் இருந்து வெளியே வந்து வென்றோம்”

இதையும் படிங்க : அஸ்வினுடன் எனக்கு சண்டை இருந்ததா?.. உண்மையில் அப்போது நடந்தது இதுதான் – ஹர்பஜன் சிங் விளக்கம்

“இதே போல கடந்த சுற்றுப்பயணத்தில் சிட்னியில் கடைசி செசன் முழுவதையும் அஸ்வின் மற்றும் விகாரி இருவரும் விளையாடினார்கள். இதன் காரணமாக அந்த போட்டி டிராவில் முடிவடைந்தது. நாங்கள் அடுத்து காபா சென்று போட்டியை வென்று தொடரையும் வென்றோம். தற்பொழுது இந்திய அணிக்கு அப்படியான ஒரு உற்சாக மனநிலை வந்திருக்கிறது தொடரை வெல்வதற்காக” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Ravi Shastri

Recent Posts