அஸ்வினுடன் எனக்கு சண்டை இருந்ததா?.. உண்மையில் அப்போது நடந்தது இதுதான் – ஹர்பஜன் சிங் விளக்கம்

0
358
Harbhajan

தற்போது இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் தனக்கும் இடையே ஏதும் கருத்து வேறுபாடுகள் வந்ததில்லை என்றும் அப்படியே வந்தாலும் நேரில் சென்று அதை அவரிடம் கேட்பேன் என்றும் ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் அமைக்கப்படும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் குறித்து ஹர்பஜன் சிங் விமர்சனங்களை எப்போதும் முன் வைத்து வந்திருக்கிறார். அப்படியான நேரங்களில் அது ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனம் என கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அவரிடமே சென்று கேட்பேன்

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன்சிங் கூறும் பொழுது “நான் குறைந்த அளவு மட்டுமே சமூக ஊடகங்களை படிக்கிறேன். எனக்கும் அஸ்வினுக்கும் இடையே மோதல் ஏற்பட்டாலோ அல்லது சண்டை சச்சரவு ஏற்பட்டாலோ அல்லது கருத்து வேறுபாடுகள் வந்தாலோ, நானே முதலில் சென்று அவரிடம் அது குறித்து என்ன என்று கேட்பேன்”

“ஆனால் எங்களுக்குள் இதுவரையில் அப்படி ஏதும் வந்தது கிடையாது. இது எதுவும் அப்படியான முறையில் அமையாது. ஏனென்றால் அவருடைய விதியில் என்ன இருக்கிறதோ? அது அவருக்கு கிடைக்கப் போகிறது. அவர் இந்திய அணிக்கு ஒரு அற்புதமான பந்துவீச்சாளராக இருந்திருக்கிறார் அதற்கு என்னுடைய மகிழ்ச்சி. நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”

- Advertisement -

நான் பேசியது இதற்காகத்தான்

“சமூக ஊடகங்களில் என்னுடைய கருத்தைத் திரித்து அது அஸ்வினுக்கு எதிரானது என்று மக்கள் கொண்டு வந்தால் அது அவர்களுடைய பார்வை. இந்தியா நல்ல ஆடுகளங்களில் விளையாடவில்லை என்றால் நான் அது குறித்து கருத்து தெரிவிப்பேன். ஆடுகளங்கள் பேட்டிங் செய்வதற்கும் கொஞ்சம் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று குரல் கொடுப்பேன். போட்டிகள் இரண்டரை நாட்களில் முடியும்படி இருப்பதற்கு எதிராக நான் பேசியிருக்கிறேன்”

இதையும் படிங்க : இப்படியா ஆஸி டீமை செலக்ட் பண்ணுவிங்க.. அந்தப் பையன் என்ன தப்பு செஞ்சாரு.. இது சரி இல்ல – மைக்கேல் கிளார்க் விமர்சனம்

“நான் இதற்கு எதிராக குரல் கொடுத்ததால் அது அஸ்வினுக்கு எதிரானது என்று சமூக ஊடகங்களில் திரிக்கப்பட்டு இருக்கிறது. உண்மையில் எனக்கு எந்த தனி நபருடனும் எந்த பிரச்சனையும் கிடையாது. இங்கு விளையாடுவது எளிதானது இல்லை என்பதால் விளையாடக்கூடிய அனைவரையும் நான் மதிக்கிறேன். அவர்கள் அனைவரும் என் சகாக்கள். அவர்கள் அனைவரும் என் சகோதரர்கள். அதில் சிலர் மூத்தவர்கள் சிலர் இளையவர்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -