“2018.. கோலியும் நானும் சொன்ன அந்த வேலையை செய்ய பும்ரா மட்டுமே தயாரா இருந்தார்” – ரவி சாஸ்திரி பேட்டி

0
95
Bumrah

இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமல்லாது பொதுவாகவே மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர் இந்தியாவின் பும்ராதான்.

அவர் பந்துவீச்சில் வைத்திருக்கும் வேரியேஷன்கள் சிறப்பானது என்றால், அதை எந்தெந்த ஆடுகளங்களில் பயன்படுத்த வேண்டும் என்கின்ற அவரது புத்திசாலித்தனம் அதைவிட சிறப்பாக இருக்கிறது.

- Advertisement -

இப்படி திறமையும் புத்திசாலித்தனமும் இணைந்து செயல்படுகின்ற காரணத்தினால், அவருடைய செயல்பாட்டின் வீரியம் எந்த அணியின் கேப்டன் விரும்பக் கூடியதாக அமைகிறது.

ஆரம்பத்தில் பும்ரா வித்தியாசமாக பந்து வீசுகின்ற காரணத்தினால் கடுமையாக காயம் அடைவார் என்று கூறப்பட்டது. மேலும் அவர் வெள்ளைப்பந்து போட்டிகளுக்கு மட்டுமே சரியான வீரர் என்றும் கூறப்பட்டது.

இவரை முதன் முதலில் சிவப்புப்பந்து கிரிக்கெட்டுக்குள் அழைத்து வந்தது விராட் கோலி கேப்டனாக இருந்த பொழுது பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரிதான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பும்ராவை மிகவும் நம்பினார். 2018 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வாய்ப்பை பெற்ற பும்ரா கலக்கினார்.

- Advertisement -

அதுகுறித்து இப்பொழுது பேசி உள்ள ரவி சாஸ்திரி கூறும் பொழுது “நான் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட முதல் அழைப்பை கொடுத்த விஷயம் இப்பொழுதும் ஞாபகத்தில் இருக்கிறது. அது கொல்கத்தாவில் நடந்தது. அவர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட தயாராக இருக்கிறாரா என்று நான் கேட்டேன். அது தன்னுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய விஷயமாக இருக்கும் என்று பும்ரா என்னிடம் கூறினார். அவரைக் கேட்காமலே அவர் எல்லோரும் வெள்ளைப் பந்து கிரிக்கெட் பந்துவீச்சாளர் என்று முத்திரை குத்தினார்கள்.

ஆனால் எனக்கு மட்டும்தான் தெரியும் அவர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட எவ்வளவு பசியுடன் காத்திருக்கிறார் என்று. நான் அவரிடம் தயாராக இருங்கள் உங்களை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகப்படுத்தப் போகிறேன் என்று கூறினேன்.

பும்ரா வெளிப்படையாக விராட் கோலி உடன் இணைந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆசைப்பட்டார். இவர்களுக்கு நன்றாகவே தெரியும், கடைசியில் யாரும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் சராசரிகளை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளப் போவது கிடையாது. கிரிக்கெட் அறிந்தவர்கள் எப்பொழுதும் உங்கள் டெஸ்ட் கிரிக்கெட் சராசரியை மட்டுமே ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்.

இதையும் படிங்க : “ஸ்டார் எல்லாம் கிடையாது.. முதல்ல பிளேயரை மதிக்கனுங்க” – ரோகித் சர்மா பரபரப்பான கருத்து

நாங்கள் தைரியமான முறையில் டெஸ்ட் கிரிக்கெட்டை அணுக முடிவு செய்தோம். இதனால் வலைப்பயிற்சியில் கூட பவுன்சர் வீச பந்துவீச்சாளர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். வலைகளில் பவுன்சர்கள் வீசி செயல்பட தயாராக இருந்த முதல் வீரராக பும்ராதான் இருந்தார்” என்று கூறியிருக்கிறார்.