இந்திய கிரிக்கெட்

விராட் கோலி இல்ல.. பைனலில் இந்த இந்திய வீரர்தான் ஆட்டநாயகன்.. நியூசிக்கு ஒரு வாய்ப்பு – ரவி சாஸ்திரி கணிப்பு

நாளை நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் யார் ஆட்ட நாயகன் விருது பெறுவார்கள்? என்பது குறித்தும், எந்த அணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்தும் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது துபாய் மைதானத்தில் ஆடுகளம் மெதுவாக காணப்படுகிறது. இது பொதுவாக பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளமாக இருந்த போதிலும், மெதுவான ஆடுகளமாக இருப்பதால் சுழல் மற்றும் வேகம் என இரண்டுக்குமே ஒத்துழைப்பு தரக்கூடியது. பேட்ஸ்மேன்கள் கவனமாக விளையாடினால் மட்டுமே ரன்கள் கொண்டுவர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் ஒருவர்தான் ஆட்டநாயகன்

இந்த போட்டி குறித்து பேசி உள்ள ரவி சாஸ்திரி கூறும் பொழுது “இந்த போட்டியில் ஆட்டநாயகன் ஒரு ஆல்ரவுண்டராக இருப்பார் என நான் நினைக்கிறேன். இந்திய அணியின் தரப்பிலிருந்து அக்சர் படேல் அல்லது ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதே சமயத்தில் நியூசிலாந்து தரப்பில் பிலிப்ஸ் ஒரு அதிரடி கேமியோ விளையாடி இரண்டு விக்கெட் கைப்பற்றி ஆட்டநாயகனாக வரலாம்”

“தற்போது மிகச் சிறப்பாக விளையாடும் விராட் கோலி முதல் 10 ரன்கள் எடுத்த அனுமதித்தால் அவர் பெரிய ஸ்கோருக்கு செல்வார். இதேதான் கேன் வில்லியம்சனுக்கும் நடக்கும். அதே சமயத்தில் ரச்சின் ரவீந்தரா மிகவும் திறமையான இளம் வீரர். நீங்கள் அவரை விளையாட விட்டால் இரட்டடிப்பு ஆபத்தாக அது முடியும்”

- Advertisement -

இந்த அணியே வெல்லும்

“தற்போது இரு அணிகளையும் எடுத்துக் கொண்டால் ஆடுகளத்தை பொறுத்து மாற்றங்கள் ஏற்பட்டால் நான் அதில் ஆச்சரியப்பட மாட்டேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக செமி பைனல் போட்டியில் தரப்பட்ட ஆடுகளம் மிகவும் சிறப்பான ஒரு ஆடுகளமாக இருந்தது. எனவே நல்ல ஒரு ஆடுகளத்தை தயார் செய்ய இவர்களுக்கு ஐந்து நாட்கள் இடைவெளியும் கிடைத்திருக்கிறது”

இதையும் படிங்க : விராட் கோலிக்கு மட்டும் இதை செஞ்சிருந்தா.. கண்டிப்பா நாங்க ஜெயிச்சிருப்போம் – முன்னாள் ஆஸி கேப்டன் கிளார்க்

“அதே சமயத்தில் நீங்கள் தேவையில்லாமல் அணியை மாற்ற மாட்டீர்கள். தற்போது இந்தியாவை வெல்லக்கூடிய பலத்தில் ஒரு அணி இருக்கிறது என்றால் அது நியூசிலாந்து அணியாகத்தான் இருக்க முடியும். இந்தியா தற்போதைக்கு வெல்வதற்கான அதிகபட்ச வாய்ப்பில் தொடங்குகிறது அவ்வளவுதான்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts