ஐபிஎல்-ல இப்படியொரு ரூல்ஸ் கொண்டுவரனும் – பிசிசிஐக்கு ரவி சாஸ்திரி கோரிக்கை!

0
126

ஐபிஎல் போட்டிகளில் பிசிசிஐ இப்படி ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அவ்வபோது காயம் காரணமாக அணியை விட்டு வெளியேறுகின்றனர். குறிப்பாக ஆசிய கோப்பை, உலக கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களில் இடம்பெறாமல் போவது. இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

குறிப்பாக பும்ரா போன்ற வீரர் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையில் காயம் காரணமாக விலகியுள்ளார். இது இந்திய அணியை பந்துவீச்சு எவ்வளவு பின்னடைவை கொடுத்தது மற்றும் கொடுத்து வருகிறது என நாம் கண்டிருக்கிறோம். ஆசிய கோப்பை தொடரின் போது காயம் காரணமாக ஹர்ஷல் பட்டேல் வெளியில் இருந்தார். அதற்கு முன்னதாக சர்வதேச போட்டிகளில் அவர் நன்றாக விளையாடி வந்தார். தற்போது மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார். ஆனால் அவரது பழைய ஃபார்மை திரும்ப கொண்டு வருவதற்கு மிகவும் சிரமப்படுகிறார். இதுபோன்ற சூழலும் நிலவுகிறது.

மேலும் ஜடேஜாவும் ஆசியகோப்பையில் ஏற்பட்ட காயத்தினால் இன்னும் குணமடையவில்லை. உலகக்கோப்பையிலும் இடம்பெற முடியவில்லை. இந்திய அணிக்கு முக்கிய ஆல்ரவுண்டர் இல்லாமல் சற்று சிரமமாக இருக்கிறது. இவை அனைத்தையும் சரி செய்வதற்கு பிசிசிஐ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதன் தலைவருக்கு முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

“ஐபிஎல் தொடரை விட சர்வதேச போட்டிகள் தான் மிகவும் முக்கியம். சில வீரர்கள் எளிதில் காயம் அடையக் கூடிய வீரர்களாக இருக்கின்றனர். அவர்களை கண்காணிக்க வேண்டும். அவர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் பொழுது குறிப்பிட்ட அணியிடம் பிசிசிஐ தலையிட்டு ஓரிரு போட்டிகள் அவரை ஓய்வில் வைக்கும் படியும், சர்வதேச போட்டிகளுக்கு அவர் மிகவும் அவசியம் என்பதையும் கூறி வீரர்களின் உடல் நிலையை பாதுகாக்க வேண்டும்.

- Advertisement -

புதிதாக வரவிருக்கும் பிசிசிஐ தலைவர் இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டால் இந்திய அணியின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமாக இருக்கும் சமீபகாலமாக இளம் வீரர்களும் காயத்திற்கு உள்ளாகின்றனர். இதுவும் இந்திய அணியின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால் நிச்சயம் பிசிசிஐ தலையிட வேண்டும்.” என்றார்.