ரவி சாஸ்திரி கூறுவது ஒன்றும் தவறல்ல, இது சம்பந்தமாக ராகுல் டிராவிட் மற்றும் இந்திய நிர்வாகத்திடம் பேசப் போகிறேன் – விராட் கோலி அதிரடி

0
481

பெங்களூரு அணியில் ஒவ்வொரு வருடமும் மிக சிறப்பாக விளையாடும் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இந்த ஆண்டு சுமாராக விளையாடி இருக்கிறார். நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு வரை அவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 20 க்கும் கீழ் இருந்தது.

நேற்றைய போட்டியில் 54 பந்துகளில் 73 ரன்கள் குவித்து மிக சிறப்பாக தன்னுடைய இரண்டாவது அரை சதத்தை இந்த சீசனில் குவித்தார். 14 போட்டிகளின் முடிவில் தற்பொழுது விராட் கோலி 303 ரன்கள் குவித்திருக்கிறார். நடப்பு சீசனில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 23.77 மட்டுமே.கடந்த ஆண்டுகளில் ஒப்பிட்டு பார்க்கையில் இது மிகவும் குறைவான ஆவெரேஜ் ஆகும்.

- Advertisement -

ரவி சாஸ்திரி என்னைப் பற்றி துல்லியமாக குறிப்பிட்டுள்ளார் – விராட் கோலி

என்னைப் பற்றி நிறைய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டு வருகின்றனர். என்னுடைய கேரியர் பழையபடி சிறப்பாக செல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு உள்ளது. இதில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தொடர்ந்து துல்லியமாக என்னைப் பற்றி குறிப்பிட்டு வருகிறார்.

கடந்த ஆறு முதல் ஏழு வருடங்களில் என்னுடைய கிரிக்கெட் கேரியர், நான் பார்த்த ஏற்றம் மற்றும் இறக்கம், அதேபோல என்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை என்னுடன் இருந்து என்று சொல்வதைவிட என்னுடன் பயணித்து நேரில் அவர் பார்த்திருக்கிறார். எனவே என்னைப் பற்றி அவருக்கு நன்றாக தெரியும், என் மீது உள்ள அக்கறையில் அவர் அவ்வாறு கூறி இருக்கிறார் என்று விராட் கோலி தற்பொழுது கூறியுள்ளார்.

- Advertisement -

ராகுல் டிராவிட் மற்றும் இந்திய அணி மேனேஜ்மெண்டிடம் பேச இருக்கிறேன்

கடந்த 10 முதல் 11 வருடங்கள் இடைவெளி இல்லாமல் விளையாடி வருகிறேன் அதிலும் ஏழு வருடங்கள் கேப்டனாகவும் விளையாடியிருக்கிறேன். ரவி சாஸ்திரி கூறுவது மிக ஆரோக்கியமான விஷயம் ஒரு சில நாட்கள் விடுப்பு எடுத்துக் கொள்வது எனக்கும் என்னுடைய அணிக்கும் முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன்.

இது ஒன்றும் தவறான விஷயம் கிடையாது. நம் மனநிலை மற்றும் ஆட்டத்தை இது சரி சமமாக வைத்துக் கொள்ள உதவும்.இது சம்பந்தமாக தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் இந்திய கிரிக்கெட் மேனேஜ்மென்ட் இடம் பேச இருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் தற்போது பெங்களூரு அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல டெல்லி அணி, அதற்கு மீதமிருக்கும் ஒரு போட்டியில் தோல்வி அடைய வேண்டும். அந்த முடிவை எதிர்நோக்கி பெங்களூரு அணி நிர்வாகம் மற்றும் பெங்களூரு அணி வீரர்கள் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.