இப்ப உண்மைய சொல்றன்.. கோலி ஓய்வு பெற இந்த 2 விஷயம் தான் முக்கிய காரணம் – ரவி சாஸ்திரி தகவல்

0
146
Virat

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதற்கான காரணம் குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார்.

இவர்கள் இருவரும் இணைந்து இந்திய அணிக்கு செயலாற்றிய காலகட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி உச்சத்தை அடைந்திருந்தது. மேலும் விராட் கோலி ஓய்வு பெறுவதற்கு முன்பாக அது குறித்து ரவி சாஸ்திரியிடம் பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களிடையே நல்ல உறவு இருந்து வந்தது.

- Advertisement -

விராட் கோலியின் ஓய்வுக்கு என்ன காரணம்?

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறப் போகிறார் என்ற செய்திகள் கசிந்ததில் இருந்து பல்வேறு வகையான யூகங்கள் வெளியாகி வந்தன. குறிப்பாக விராட் கோலி இரண்டு ஆண்டுகளுக்கு டெஸ்ட் கேப்டன் பதவியை எதிர்பார்க்கிறார் என்றும், கம்பீர் அதற்கு சம்மதிக்காததால் ஓய்வு பெறுகிறார் என்றும் கூறப்பட்டது.

இன்னொரு பக்கத்தில் விராட் கோலி ஓய்வு பெற்றதற்கு கம்பீர் மிகச் சிறப்பான வாழ்த்தை தெரிவித்து இருந்தார். இரவே இவர்கள் இருவருக்கும் இடையில் எந்த விதமான உரசல்களும் இல்லை என்பது தெளிவானது. எனவே விராட் கோலியின் ஓய்வுக்கு பின்னால் வேறு காரணங்கள் இருக்கிறது என்று பேசப்பட்டது. தற்போது அது குறித்து ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார்.

- Advertisement -

ரவி சாஸ்திரி சொன்ன உண்மை

இது குறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது ” விராட் கோழியை எடுத்துக் கொண்டால் அவர் உடல் அளவில் மிகவும் பிட் ஆக இருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அவர் மனதளவில் அப்படி இல்லை. நீங்கள் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஒரு அணியை 5, 6 ஆண்டுகள் கேப்டனாக வழி நடத்தி வந்திருக்கிறீர்கள். இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. எனவே இதை சமாளிப்பது பெரிய கடினம்”

இதையும் படிங்க : கோலியை பற்றி இதை நான் சொல்வதை விட.. நீங்கள் சொன்னது அற்புதமான விஷயம்.. ஆஸி வீரரை பாராட்டிய ரவி சாஸ்திரி

“மேலும் மீடியாக்களுக்கு பதில் கொடுக்க வேண்டும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு வெற்றியை அளிக்க வேண்டும், இன்னொரு பக்கத்தில் நீங்கள் ஐசிசி கேப்டனாக அவர்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும் என உங்களுக்கு மும்முனை பாரம் அதிகரிக்கிறது. இதனால் விராட் கோலி மனதளவில் மிகவும் சோர்வடைந்து விட்டார். கடந்த நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்னால் அவருக்கு இருந்த பசி இப்பொழுதும் இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்த இரண்டு காரணங்களும் சேர்ந்து அவரை ஓய்வு பெற வைத்துவிட்டது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -