இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் விராட் கோலியின் பெருமையை பாராட்டி பேசி இருக்கும் ஆஸ்திரேலியா வீரரை இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியிருக்கிறார்.
கோலியை பாராட்டிய பின்ச்
இந்திய அணியின் விராட் கோலி கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெஸ்ட் பார்மெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இந்திய ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி 68 போட்டிகளில் விளையாடி அதில் 40 வெற்றிகள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இது சொந்த மண்ணில் நடைபெற்ற 31 போட்டிகளில் இந்திய அணி 24 வெற்றிகள் பெற்றுள்ளது.
விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வை கவனித்த ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆரோன் பின்ச் விராட் கோலி குறித்து கூறும் போது “விராட் கோலியின் தலைமை பண்பில் மிகவும் தனித்துவமான விஷயம் என்னவென்றால், அவர் ரன்கள் குவிக்கும் விதத்தை இப்போது பார்க்கும் போது ஐந்து வருடங்களுக்கு முன்பு ஏற்றது போல இல்லை என்று நீங்கள் கூறலாம். ஆனால் என்னை பொறுத்தவரை விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே இந்தியாவில் சுழன்று கொண்டிருக்கும் ஆடுகளங்களில் அபாரமாக விளையாடினார். விராட் கோலியின் சொந்த ஈகோவை அவர் ஒதுக்கி வைத்து விட்டு இந்தியாவில் எதிரணியை வெற்றி பெறுவதற்கு என்ன சிறந்தது என்பதற்கு தகுந்தவாறு தனது சொந்த சாதனைகளை ஒதுக்கி வைத்தார்.
அருமையான கருத்தை கூறினீர்கள்
இந்தியாவில் அவர் சில பிளாட் ஆடுகளங்களை அமைத்து என் சொந்த சாதனைகளை நான் உருவாக்க போகிறேன் என சிறப்பாக விளையாடியிருக்கலாம். ஆனால் அவர் அதை எப்படி செய்யாமல் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு தனது ஈகோவை ஒதுக்கி வைத்து அணியின் நிழலுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்” என பின்ச் பேசியிருந்தார்.
இதையும் படிங்க:வெளிய உட்கார்ந்து அணி தோல்வி அடைவதை பார்க்க என்னால முடியல.. ரொம்ப விரக்தியா இருக்கேன் – சஞ்சு சாம்சன் ஆதங்கம்
இதனை கவனித்த ரவி சாஸ்திரி “அருமையான கருத்தை கூறினீர்கள், அது என்னிடமிருந்து வெளிவருவதை விட உங்களிடமிருந்து வெளிவருவது சிறப்பானதாக இருக்கிறது” என அவரைப் பாராட்டி பேசி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 9,230 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 15,921), ராகுல் டிராவிட் (13,265), மற்றும் சுனில் கவாஸ்கர் (10,122) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






