இந்தியாவுக்கு ஒரு பிளஸ்.. ஆஸிக்கு ஒரு மைனஸ்.. அது 24 காரட் தங்கம்.. கப் எங்களுக்கே – ரவி சாஸ்திரி சவால்

0
603
Ravi

இந்த ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரை இந்திய அணி கைப்பற்றுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறது என ரவி சாஸ்திரி விளக்கிக் கூறியிருக்கிறார்.

இந்த தொடர் குறித்து ஆஸ்திரேலியா முகாமில் இருந்து நிறைய முன்னாள் வீரர்கள் மற்றும் முன்னாள் பயிற்சியாளர்கள் தங்கள் ஆஸ்திரேலிய அணியே இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என தொடர்ந்து பேட்டி தந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக பதிலடி தரும் வகையில் ரவி சாஸ்திரி தற்போது பேசியிருக்கிறார்.

- Advertisement -

கவாஸ்கரின் வேண்டுகோள்

ஆஸ்திரேலியா முகாமில் இருந்து தொடர்ந்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆஸ்திரேலிய அணி வெல்லும் என்று பேசிக்கொண்டு வருவதற்கு இந்திய தரப்பிலிருந்து சரியான பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என கவாஸ்கர் கேட்டிருந்தார். ரவி சாஸ்திரி மட்டும்தான் பேசியிருக்கிறார் அது போதாது என்று கூறியிருந்தார்.

மேலும் கவாஸ்கர் இது குறித்து பேசி இருந்த பொழுது ஸ்டீவ் ஸ்மித்தை அவுட் செய்ய ஒரு புதுவிதமான பந்துவீச்சை கண்டுபிடித்து வைத்திருப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதனால் பயந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் ஸ்மித்தை தொடர்ந்து துவக்க வீரராக அனுப்பும் என்றும், பும்ராவை வைத்து புதிய பந்தில் ஸ்மித்தை அவுட் ஆகலாம் என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

24 காரட் தங்கம்

இந்த நிலையில் மீண்டும் களத்திற்கு வந்த ரவி சாஸ்திரி இந்த டெஸ்ட் தொடர் குறித்து பேசும் பொழுது ” எங்களுடைய இந்திய பந்துவீச்சாளர்கள் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார்கள். இது ஆஸ்திரேலியாவிற்கு ஒரு பெரிய சவால். மேலும் ஆஸ்திரேலியா பேட்டிங் வரிசை முன்பு இருந்தது போல கிடையாது அதில் நிறைய அனுபவம் மற்ற வீரர்கள் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட அவர்கள் ஓய்வு பெறக்கூடிய கட்டத்திற்கும் வந்து விட்டார்கள். இதன் காரணமாக இந்திய அணி தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது.

இதையும் படிங்க : 55 பந்து 165 ரன்.. நான் கிறிஸ் கெயில் ரெக்கார்ட உடைச்சது எனக்கே தெரியாது – பதோனி பேட்டி

அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணி நல்ல போட்டி அணியாக இருக்கும். இதில் கேள்விக்கு இடம் கிடையாது. நான் 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்தேன். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அவர்களது மண்ணில் பயிற்சியாளராக நான் பெற்ற இரண்டு டெஸ்ட் தொடர் வெற்றிகள் 24 காரட் தங்கம் போன்றது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -