எனக்கு கில் தேவையில்ல.. கம்பீர் சாம்சனுக்கு வாய்ப்பு தரணும்.. முக்கிய காரணம் இதுதான் – ரவி சாஸ்திரி கருத்து

0
17
Gill

நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் கில்லை விளையாட வைப்பதை விட சஞ்சு சாம்சனை விளையாட வைப்பதுதான் சரியாக இருக்கும் என இந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.

தற்போது இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக கில் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக அவர் நிச்சயம் ப்ளேயிங் லெவனில் இடம் பெறுவார். மேலும் அவர் துவக்க ஆட்டக்காரராக விளையாடுவார் என்பதால் சஞ்சு சாம்சன் விளையாடுவது கேள்விக்குறியாகி இருக்கிறது.

- Advertisement -

அதிரடி 3 சதங்கள்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து தொடர்ச்சியாக வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சன் டி20 கிரிக்கெட்டில் மூன்று சதங்கள் அடித்து அசத்தியிருக்கிறார். இந்த காலகட்டத்தில் அதிக சதங்களை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அடித்தவராக இருக்கிறார்.

தற்போதைய ஆசியக் கோப்பை அணியில் அவரே மூத்த வீரராகவும் இருக்கிறார். சஞ்சு சாம்சன் இந்திய அணிக்காக 2015 ஆம் ஆண்டு அறிமுகமானார். ஆனாலும் அவருக்கு மற்றவர்களைப் போல இந்திய அணியில் தொடர் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. தற்போதும் அவருடைய இடம் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

- Advertisement -

அவர் ஆபத்தானவர்

இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது “சஞ்சு சாம்சன் முதல் மூன்று இடங்களில் மிகவும் ஆபத்தானவர். அந்த இடங்களில் விளையாடினால் மட்டுமே அவரால் மேட்ச்சில் வெற்றி பெற முடியும். அவரை முதல் மூன்று இடத்திலிருந்து மாற்றக்கூடாது. கில்லுக்கு பதிலாக சாம்சன் என்பது தற்போது கடினமாக இருக்கிறது. ஆனால் கில் சாம்சன் போல வர முடியாது. முதல் மூன்று இடங்களில் டி20 கிரிக்கெட்டில் நிறைய ரன்கள், சதம் அடித்திருக்கிறார்”

இதையும் படிங்க : ஆசிய கோப்பைக்கு முழுசா தயாராகிட்டோம்.. எங்களை சந்திக்க தயாராகிக்கோங்க – பாகிஸ்தான் கேப்டன் சவால்

“தற்போது யுஏஇல் ஆசியக் கோப்பை நடைபெறுவதால் அங்குள்ள வெப்பத்தின் காரணமாக சுழல் பந்துவீச்சாளர்களுக்கு அதிக சாதகம் இருக்கும். எல்லா அணிகளும் நான்கு சுழல் பந்துவீச்சாளர்களுடன் வரலாம். இந்திய அணியில் கூட விரல் மற்றும் மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர்கள் இடம்பெற வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -