மும்பை இப்ப கப் அடிக்கலனா இததான் செய்யணும்.. ஆனா அங்க பாகுபலி இருக்கார் விடமாட்டார் – ஹர்பஜன் சிங் பேச்சு

0
145
Harbhajan

நடப்பு ஐபிஎல் தொடரை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும் என்றும், அவர்கள் வெல்ல முடியாவிட்டால் அவர்கள் தங்களை தாங்களே குற்றம் சொல்லிக் கொள்ள வேண்டும் எனவும் ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.

இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களின் முதல் ஐந்து போட்டியில் நான்கு போட்டிகளை தோற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருந்தது. இதற்கு அடுத்து வரிசையாக 6 போட்டிகளை வென்று தற்போது 14 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது.

- Advertisement -

குற்றம்தான் சொல்லிக் கொள்ள வேண்டும்

இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசும் பொழுது ” நீங்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலத்தை எடுத்து பார்த்தால், அவர்கள் முதலில் பேட்டிங் செய்தால் பெரிய அளவில் ரன்கள் குவிப்பார்கள். மேலும் அவர்களுக்கு பந்துவீச்சிலும் பல விருப்பங்கள் இருக்கின்றன. பும்ரா உள்ளே வரும் பொழுது அவர் பாகுபலி போன்ற வேலைகளை செய்கிறார். தீபக் சகர், போல்ட், கரண் சர்மா, சான்ட்னர் மற்றும் கார்பின் போஸ் என பெரிய படையே அவர்களிடம் இருக்கிறது”

“மேலும் அவர்களால் ஏதாவது செய்ய முடியாவிட்டால் உடனே பும்ரா வந்து விடுவார். மேலும் இந்த ஆண்டு அவர்களால் கோப்பையை வெல்ல முடியாவிட்டால் அவர்கள் தங்களை தாங்களே குற்றம் சொல்லிக் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு சிறப்பான கிரிக்கெட் விளையாடும் மும்பை அணியை யாராலும் பிடிக்க முடியாது”

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் மட்டுமே விளையாடுகிறது

“நேற்றைய போட்டி ஒருதலைப்பட்சமாக அமைந்தது. இந்த போட்டியில் முழுக்க முழுக்க எல்லா துறைகளிலும் மும்பை ஆதிக்கம் செலுத்தியது. ராஜஸ்தான் வெறும் பார்வையாளர் போல மட்டுமே வந்து சென்றது. ஆனால் மும்பை அணி முழுமையாக விளையாடியது. அவர்கள் பாசிட்டிவாக வந்தார்கள் முதலில் பேட்டிங் செய்தும் பெரிய ஸ்கோர் எடுத்தார்கள்”

இதையும் படிங்க : நான் நிச்சயம் சூரியவன்சியை வாங்கியிருக்க மாட்டேன்.. டிராவிட் தப்பான முடிவு- சிஎஸ்கே முன்னாள் வீரர் பேச்சு

“நீங்கள் முதல் நான்கு ஐந்து ஓவர்களில் எதிரணியின் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினால் அவர்கள் எப்படி ஆட்டத்தை எடுத்துச் செல்ல முடியும்? மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களின் பவுலிங் ஆதிக்கத்தை வெளியில் காட்ட ஆரம்பித்திருக்கிறது. 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கு மும்பை வெற்றி பெறாதது அவர்களுக்கு வேதனையாக இருந்திருக்கும். இந்த முறை அவர்கள் அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -