இந்திய கிரிக்கெட்

ஆஸி டெஸ்ட் தொடர்.. இந்த ஒரு இந்திய வீரர் விமானம் ஏறணும்.. அப்பதான் எல்லாம் மாறும் – ரவி சாஸ்திரி பேட்டி

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் ஒரு முக்கியமான வீரர் இணைந்தால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக மாறும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது இந்திய அணி 30 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டி மேற்கு ஆஸ்திரேலியா பெர்த் மைதானத்தில் நவம்பர் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது.

வெளியில் வராத கவலையான விஷயம்

இந்திய அணியை பொறுத்தவரையில் பேட்டிங் யூனிட்டில் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் இருப்பதும், ரிஷப் பண்ட் தவிர மற்றவர்கள் இளம் வீரர்களாகவும் அனுபவம் மற்றவர்களாகவும் இருப்பது இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் கவலை அளிப்பதாக இருக்கிறது.

இதைத் தவிர இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட் மற்றொரு முக்கிய கவலையானவிஷயமாகவே இருந்தாலும் வெளியில் தெரியவில்லை. தற்போது இதில் பும்ரா மட்டுமே நம்பிக்கை அளிக்கக்கூடிய ஒருவராக இருக்கிறார். மற்றபடி வேறு எந்த பந்துவீச்சாளரையும் குறிப்பிட்டு விக்கெட் எடுத்து தருவார்கள் என்று கூறும்படி இல்லை. இதுதான் இந்திய அணிக்கு உண்மையில் கவலை அளிக்க கூடிய விஷயமாக இருக்கிறது.

- Advertisement -

இந்த வீரர் விமானம் ஏற வேண்டும்

இந்த நிலையில்தான் நடப்பு ரஞ்சி டிராபியில் பெங்கால் அணிக்காக மத்திய பிரதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயத்தில் இருந்து திரும்பி வந்து 19 ஓவர்கள் பந்து வீசி 54 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றி தன்னை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். எனவே அவர் ஆஸ்திரேலியா சென்று பும்ராவுடன் இணைவது இந்திய அணியை வலுப்படுத்தும் என்று ரவி சாஸ்திரி நம்புகிறார்.

இதையும் படிங்க : ஆஸி மீடியாக்கள் விராட்டை கொண்டாடி.. ரோகித்தை மதிக்காமல் இருக்க காரணம் இதுதான் – ஆகாஷ் சோப்ரா விளக்கம்

இது குறித்து ரவி சாஸ்திரி கூறும் பொழுது ” எனக்கு ஏதேனும் ஒரு விஷயம் தேவையாக ஆஸ்திரேலியா தொடரில் இருந்திருந்தால், அது உம்ராவுக்கு உதவியாக யாராவது இருக்க வேண்டும் என்று நினைத்திருப்பேன்.எனவே இந்த வகையில் ஷமி உடல் தகுதி பெற்று கூடுமானவரையில் சீக்கிரத்தில் இந்திய அணியுடன் சென்று இணைவது நல்லது என்று நான் நினைக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -
Published by