ஆஸி மீடியாக்கள் விராட்டை கொண்டாடி.. ரோகித்தை மதிக்காமல் இருக்க காரணம் இதுதான் – ஆகாஷ் சோப்ரா விளக்கம்

0
95
Virat

தற்போது பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் இந்திய வீரர் விராட் கோலிக்கு முன்னுரிமை கொடுத்தும் ரோஹித் சர்மாவை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கான காரணங்கள் குறித்து ஆகாஷ் சோப்ரா விளக்கம் அளித்திருக்கிறார்.

உலக கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு இதுவே கடைசி ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணமாக இருக்கலாம். இதன் காரணமாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் விராட் கோலிக்கு மிகப்பெரிய அளவில் கவர் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அதே சமயத்தில் கேப்டன் ரோகித் சர்மா குறித்து எந்தவித பெரிய செய்திகளையும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிடவில்லை.

- Advertisement -

ஜெய்ஸ்வால் வரை கிடைத்த மரியாதை

விராட் கோலிக்கு ஆஸ்திரேலியா ஊடகங்கள் சிறப்பான முறையில் மரியாதை செய்து வருகின்றன. மேலும் விராட் கோலியின் இடத்திற்கு அடுத்து ஜெய்ஸ்வால் முன்னேறுவார் என அவருக்கும் தனி செய்திகள் வெளியிட்டிருக்கின்றன. ஆனால் கேப்டன் ரோகித் சர்மா குறித்து எந்த பெரிய கவர் ஸ்டோரியும் வெளிவரவில்லை.

இது குறித்து பேசி இருக்கும் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் நீங்கள் மரியாதை பெற விரும்பினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட வேண்டும். நீங்கள் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடினாலும் கூட பெரிய மரியாதை கிடைக்காது. நீங்கள் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தினால் வரலாற்றில் அழகாக அவர்களால் எழுதப்படுவீர்கள்”

- Advertisement -

விராட் கோலிக்கு பின்னால் பிஆர் ஏஜென்சி இல்லை

“விராட் கோலிக்கு கிடைத்து வரும் மரியாதைக்கு பின்னால் ஏதாவது பிஆர் ஏஜென்சி இருக்கிறதா? என்றால் கிடையாது. ஆஸ்திரேலியா எப்பொழுதும் உங்கள் முகத்திற்கு நேராக இருக்கும் என்று எங்களுக்கு சிறுவயதில் இருந்து கூறப்பட்டிருக்கிறது. நீங்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடும் பொழுது அந்த அணிக்கு எதிராக மட்டுமல்ல மொத்த ஆஸ்திரேலியாவுக்கும் எதிராகவும் விளையாடுகிறீர்கள். அதே சமயத்தில் அவர்கள் அணியை நீங்கள் வீழ்த்தினால் ஆதிக்கம் செலுத்தினால் அவர்கள் உங்களின் ரசிகர்கள் ஆகிவிடுவார்கள்”

இதையும் படிங்க : ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்.. மும்பை இந்தியன்ஸ் வீரர் அபார சாதனை.. ரஞ்சி டிராபியில் 3வது வீரராக வரலாறு

“வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாடும் போது ரோஹித் சர்மா ஒரு முழுமையான கோட் பிளேயர். ஆனால் ஒரு முழு டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவில் ரோஹித் சர்மா விளையாடவில்லை. இந்த முறையும் அவர் முழு தொடரையும் விளையாடப் போவதில்லை. எனவே ரோஹித் சர்மாவுக்கு அந்த அந்தஸ்து கிடைக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -