இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு முக்கியமான மாற்றங்களை செய்ய வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடவில்லை. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு திரும்பி வந்த அவர் பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்தில் விளையாட வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த இடத்தில் அவர் தன்னை இறக்கிக் கொண்டும் கூட இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இரண்டாவது டெஸ்டில் படுதோல்வி அடைந்திருக்கிறது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியா மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை தொடர்ந்து கைப்பற்றிய ஒரே பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருக்கிறார். இவருடைய பயிற்சி காலத்தில் இரண்டு முறை இந்திய அணி விராட் கோலி மற்றும் ரகானே தலைமையில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் கைப்பற்றியது.
ஆஸ்திரேலிய மண்ணில் என்ன பெரிய மோசமான சூழ்நிலை வந்தாலும் மன உறுதியை விட்டுக் கொடுக்காமல் வீரர்களை மனதளவில் சோர்ந்து போக விடாமல் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பெரிய அளவில் நம்பிக்கையை கொடுத்து உற்சாகமாக வைத்திருந்தார். இது ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி இரண்டு முறை டெஸ்ட் தொடரை வெல்வதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருந்திருக்கிறது.
தற்போது ரோகித் சர்மாவுக்கு அறிவுரை கூறியிருக்கும் ரவி சாஸ்திரி கூறும் பொழுது “ரோகித் சர்மா இந்த தொடரில் நீங்கள் இன்னும் மீண்டு வர முடியும் என்று நீங்கள் நம்ப வேண்டும். இந்த இரண்டு அணிகளுமே எதிர் பன்ச் கொடுப்பதில் மிக நெருக்கத்தில் இருக்கின்றன. அந்த பத்து வருடத்தில் நீங்கள் ஒரு போட்டியை தோற்றால் ஒரு போட்டியை வெல்கிறீர்கள். அதனால் நீங்கள் நம்பிக்கையாக இருக்க வேண்டும்”
“ரோகித் சர்மா தன்னை துவக்க வீரராக வைத்துக் கொள்ள வேண்டும். அங்குதான் அவர் தன்னை அச்சமற்றவராக வெளிப்படுத்திக் கொள்ளக் கூடியவராக இருக்க முடியும். அவரது உடல் மொழியை பார்க்கும் பொழுது கொஞ்சம் அடங்கிவிட்டார் என்று நினைத்தேன். மேலும் களத்தில் ரோகித் சர்மா பெரிய அளவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை”
இதையும் படிங்க : பிசிசிஐ-காக பாகிஸ்தான் இனிமே இதை செய்யாதிங்க.. அக்தருக்கு எதிராக ஷாஹித் அப்ரிடி கருத்து
“பெர்த் டெஸ்டில் தோற்றபொழுது ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் பேசுவதற்கு தேர்ந்தெடுத்த வார்த்தைகள் மிகவும் முக்கியமானது. அந்த டெஸ்டில் தோற்ற பிறகு அவர் நாங்கள் போதுமான அளவு விளையாடவில்லை, ஆனால் ஸ்கோர் போர்டு காட்டுகிற அளவுக்கு நாங்கள் மோசமானவர் இல்லை என்று கூறினார். இந்த வார்த்தைகள் தேர்ந்தெடுப்பு ஏன் முக்கியமானது என்றால், ஆஸ்திரேலியா அணியை விமர்சித்தவர்கள் ஸ்கோர் போர்டை வைத்துதான் விமர்சித்தார்கள். எனவே ரோகித் சர்மா இதிலும் கவனமாக இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.