இந்திய கிரிக்கெட்

ஹர்திக் பாண்டியா இதை செய்யறது தப்பு.. டீமோட பேலன்ஸ் நிச்சயம் பாதிச்சிடும் – ரவி சாஸ்திரி அட்வைஸ்

இலங்கை சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த நிலையில் டி20 தொடரில் பங்கேற்கும் ஹர்திக் பாண்டியா ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. இது குறித்து தற்போது ஹர்திக் பாண்டியாவுக்கு ரவி சாஸ்திரி அறிவுரை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயம் அடையும் வாய்ப்பில் இருக்கிறார். மேலும் அவர் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக இருக்கின்ற காரணத்தினால் காயமடையும் வாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக அவர் தற்போது வெள்ளைப்பந்து வடிவத்தில் மட்டுமே விளையாடி வருகிறார்.

மேலும் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். அதே சமயத்தில் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து எல்லா போட்டிகளையும் விளையாடுவாரா? என்பது சந்தேகத்திற்கு இடமாக இருக்கிறது. தற்போது இது குறித்து இந்திய முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அறிவுரை கூறியிருக்கிறார்.

ரவி சாஸ்திரி இது குறித்து கூறும் பொழுது ” ஹர்திக் பாண்டியா தொடர்ந்து விளையாடுவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். போட்டியின் உடல் தகுதி மிகவும் முக்கியமானது. எனவே டி20 கிரிக்கெட் எதுவாக இருந்தாலும் அவர் முடிந்த வரை அதிகம் விளையாட வேண்டும். அதிலிருந்து தன்னை வலுவாக அவர் உணர்ந்தால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கும் தொடர்ந்து வருவார்.

- Advertisement -

அதே சமயத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் பந்து வீச்சு மிக முக்கியமானது. அவர் பத்து ஓவர்கள் பந்து வீச வேண்டியது அவசியம். இந்த இடத்தில் வந்து யாராவது மூன்று ஓவர்கள் மட்டுமே பந்து வீசினால் அது அணியின் சமநிலையை பாதிக்கும். ஆனால் அவர் எட்டு முதல் பத்து ஓவர்கள் தொடர்ந்து வீசுவார் என்றால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாடுவார்.

இதையும் படிங்க : 207 ரன்.. கம்மின்ஸ் அணியை புரட்டி எடுத்த ஸ்மித்.. பாண்டிங்கின் வாஷிங்டன் சாம்பியன்.. எம்எல்சி 2024

எல்லாவற்றையும் தாண்டி இது அவரைப் பொறுத்த ஒரு விஷயம் என்று நான் நினைக்கிறேன். யாரையும் விட அவர் தன் உடலை நன்றாக புரிந்து கொள்ளக் கூடியவர்.எனவே இது ஊக்கமளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும். நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் அவர் செயல்பட்ட விதமும் அவருக்கு ஊக்கத்தை கொடுக்கும். எனவே தன்னுடைய உடல் தகுதியை பெறுவதற்கு வெளியில் இருந்து எந்த ஊக்கமும் தேவையில்லை என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts