இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கான பதவிக்காலம் முடிவடைந்து ராகுல் டிராவிட் விலகினார். இதைத்தொடர்ந்து கவுதம் கம்பீர் புதிய தலைமை பயிற்சியாளராக வந்திருக்கிறார். இவர்களுக்கு முன்னால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி தற்போது கௌதம் கம்பீர் பற்றி பேசி இருக்கிறார்.
ரவி சாஸ்திரி விராட் கோலி தலைமைப் பொறுப்பில் பயிற்சியாளராக பணியாற்றிய காலத்தில் இந்திய டெஸ்ட் அணியை உச்சத்திற்கு கொண்டு சென்றார். இன்று வரையில் இவர்களுடைய காலத்தில் அமைந்த டெஸ்ட் கிரிக்கெட் வெற்றிகள் மிகவும் பெரியவை. ரவி சாஸ்திரி விராட் கோலி கூட்டணிக்கு இந்திய கிரிக்கெட்டில் தனி இடம் இருக்கிறது.
இந்த நிலையில் இவர் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பற்றி பேசிய பொழுது “கம்பீர் சமகாலத்தவர், மேலும் அவருக்கு சமீபத்தில் ஒரு நல்ல ஐபிஎல் சீசன் இருந்தது. அவர் சரியான வயதில் பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்திருக்கிறார். இதனால் அவர் புதிய யோசனைகளையும் கொண்டு வருவார். மேலும் அவருக்கு இப்போது உள்ள பல வீரர்கள் பற்றி தெரியும். அவர் ஐபிஎல் தொடரில் பல அணிகளை பார்த்து வந்திருக்கிறார்.
மேலும் எங்களுக்கு கம்பீரை பற்றியும் தெரியும். இதுவெல்லாம் சேர்ந்து அவரை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும் என்று நினைக்கிறேன். கம்பீர் முட்டாள்தனமான நபர் கிடையாது. அவர் சிறந்த புதிய யோசனைகளை அணிக்குள் கொண்டு வருவார். முக்கியமாக அவருக்கு முதிர்ச்சி அடைந்த ஒரு அணி கிடைத்திருக்கிறது. இப்போது அவர் செட்டில் ஆகிவிட்டார்.
நீங்கள் முதிர்ச்சி அடைந்து விட்டீர்கள் என்று நினைத்தாலும் கூட, நீங்கள் புதிய யோசனைகளை கொண்டு வருவதன் மூலமாகவும் பயன் அடையலாம்.எனவே இது சுவாரசியமான நேரமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். வெளிப்படையாக ஒரு பயிற்சியாளருக்கு மேலாண்மை செய்வது தான் முக்கிய வேலையாக இருக்கிறது. அவரிடம் நல்ல அணி மற்றும் வீரர்கள் இருக்கிறார்கள். எனவே அவர் என்ன செய்கிறார் என்று பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்.
இதையும் படிங்க : இங்கிலாந்து ஆஸ்திரேலியா மாதிரி பாகிஸ்தான் அணியை கொண்டு வருவேன்.. இதைத்தான் செய்வேன் – கோச் கில்லெஸ்பி பேட்டி
தற்போது அவர் வீரர்களை புரிந்து கொள்வது தான் சவாலான ஒன்றாக இருக்கும். தனிப்பட்ட வீரர்களுடைய பலம் என்ன? அவர்களுடைய ஆளுமை என்ன?அவர்கள் குணாதிசயங்கள் என்ன? என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதரை புரிந்து கொள்வதற்கு பின்னால் நிறைய வேலைகள் இருக்கிறது. இதுதான் அவருக்கு பெரியதாக இருக்கும். ஆனால் அவர் சமகாலத்தவர் என்பதால் இதில் பிரச்சனை இருக்காது என்று நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.