இங்கிலாந்து ஆஸ்திரேலியா மாதிரி பாகிஸ்தான் அணியை கொண்டு வருவேன்.. இதைத்தான் செய்வேன் – கோச் கில்லெஸ்பி பேட்டி

0
105
Gillespie

பாகிஸ்தான் வெள்ளைப்பந்து அணிக்கு தென் ஆப்பிரிக்காவின் கேரி கிரிஸ்டின் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஆஸ்திரேலியாவின் ஜேசன் கில்லெஸ்பி ஆகியோர் தலைமை பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்து பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியை எப்படி உருவாக்குவேன் என்பது குறித்து அத அணியின் தலைமை பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பி பேசியிருக்கிறார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்த காரணத்தினால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எப்படியாவது எல்லாவற்றையும் சரி செய்து உலக கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற வேண்டும் என்று முடிவு செய்தது. அதே சமயத்தில் பாகிஸ்தான் அணிக்கு உள்ளே வீரர்களிடையே ஒற்றுமை இல்லாமல் இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இரண்டு புதிய பயிற்சி ஆள்களை கொண்டு வந்து அவர்களுக்கு அதிகபட்ச அதிகாரத்தை கொடுத்து, கட்டுப்படாத வீரர்களை நீக்கவும், மேலும் புதிய அணுகு முறையில் கிரிக்கெட்டை அணுகவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பி பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியை எப்படி உருவாக்குவது? என்பது குறித்து பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் பொழுது “பாகிஸ்தான் பொதுமக்களும் ஊடகங்கள் இரண்டும் சேர்ந்து நாங்கள் விளையாடுவதை விரும்பி பார்க்க வேண்டும். இந்த வகையில் பாகிஸ்தான் அணி விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். இதற்கு எளிய உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் இங்கிலாந்து. இங்கிலாந்து எப்படி விளையாடும்? என்று யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்காது.

- Advertisement -

இதேபோல் ஆஸ்திரேலியா அணியின் போட்டிக்கானவேலைகள் குறித்தும் யாருக்கும் சந்தேகங்கள் இருக்காது. நான் இதைத்தான் பாகிஸ்தான் அணியிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன். இதுதான் ஒரு அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு பயிற்சியாளராக என்னுடைய அணி இப்படித்தான் விளையாடுவேன் என்று நான் சொல்ல விரும்புகிறேன்.

இதையும் படிங்க : என்னை பத்தி கம்பீருக்கு இந்த விஷயம் நல்லா தெரியும்.. 10 வருஷத்துக்கு முன்னவே சொல்லிட்டாரு – சூரியகுமார் யாதவ் பேட்டி

Pபாகிஸ்தான் வீரர்கள் சென்ட்ரல் கான்ட்ராக்ட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கு உடல் மற்றும் மன ஓய்வு தேவைப்பட்டால் ஓய்வு கொடுக்கப்படும். அதே வேளையில் அவர்கள் தேவை என்றாலும் அவர்கள் விளையாட வேண்டும். மேலும் அவர்கள் வெளியில் சென்று லீக்குகள் விளையாடி அனுபவம் பெறுவதையும் நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எந்த வகையிலும் தொந்தரவாக இருந்து விடக்கூடாது என்பதில் தான் கவனம் செலுத்துகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -