கில்லை பத்தி பேச அந்த தகுதி உங்களுக்கு இல்லை.. எனக்கு இவர் கேப்டனா வரக்கூடாது – ரவி சாஸ்திரி பேச்சு

0
140
Gill

இந்திய டெஸ்ட் அணிக்கு யார் அடுத்த கேப்டனாக வரவேண்டும்? என்றும், யாரை கேப்டனாக கொண்டு வரக்கூடாது? என்றும் இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

தற்போது இந்திய அணி அடுத்த மாதம் ஜூன் 20ஆம் தேதி இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட காரணத்தினால் புதிய கற்பனை கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் இருக்கிறது.

- Advertisement -

கில்லை பற்றி பேச தகுதி இல்லை

இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது “நான் கில்லை பார்க்கும் பொழுது அவர் மிகவும் சுவாரசியமானவராக தெரிகிறார். அவர் மிகவும் நிதானமாகவும் அமைதியானவராகவும் இருக்கிறார். அவரிடம் எல்லா நல்ல குணங்களும் இருக்கிறது. கில் பற்றி பேச்சு எடுக்கும் பொழுது அவர் வெளிநாட்டில் ரன் எடுக்கவில்லை என்பது வருகிறது. இதைப் பற்றி பேசக் கூடியவர்கள் முதலில் வெளிநாட்டில் அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். பிறகு கில்லை பற்றி பேசட்டும்”

“என்னை பொறுத்தவரையில் கில்லுக்கு இன்னும் பத்து ஆண்டுகளுக்கு மேல் கிரிக்கெட் இருக்கிறது. அவர் நிச்சயம் வெளிநாட்டு தொடர்களில் ரன்கள் எடுப்பார். அதற்கு நாம் அனுமதிக்க வேண்டும். அவர் ஒரு தரமான பேட்டர். இதுவரை ரன்கள் எடுக்காததற்கு எல்லாம் ஏதாவது ஒரு தொடரில் சேர்த்து வைத்து வெளிநாட்டில் எடுக்கும் திறமை அவரிடம் இருக்கிறது”

- Advertisement -

இவர் கேப்டன் ஆகவேண்டாம்

“என்னைப் பொறுத்த வரையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குப் பிறகு நேரடியாக பும்ரா இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக வந்திருக்க முடியும். ஆனால் இப்பொழுது அவர் கேப்டன் ஆவதை நான் விரும்பவில்லை. அப்படி செய்யும் பொழுது நீங்கள் ஒரு பந்துவீச்சாளரை இழந்து விடுவீர்கள்”

இதையும் படிங்க : விராட் கோலி மேல அதிக கவனம் வைக்காதீங்க.. அவரோட லட்சியம் இப்போ ஒரே விஷயம்தான் – ஆர்சிபி இயக்குனர்

“பும்ரா இப்பொழுது தனது உடலை போட்டியில் எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர் பெரிய காயத்திற்கு பிறகு திரும்பி வருகிறார். தற்போது அவர் ஐபிஎல் தொடரில் விளையாடிய இருந்தாலும் அது வெறும் 4 ஓவர்கள் வீச வேண்டிய போட்டி. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 முதல் 15 ஓவர்கள் வீச வேண்டி இருக்கும். எனவே உண்மையான சவால் இப்பொழுதுதான் ஆரம்பிக்க இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -