நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நாளை இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாவது செமி பைனல் போட்டியில் விளையாட இருக்கிறது.
இந்த உலகக் கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா பேட்டிங் மிகவும் சுமாராக இருந்து வருகிறது. எனவே அவரை நீக்கிவிட்டு கீழ் வரிசையில் ரிங்கு சிங்கை விளையாட வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது. இது குறித்து ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார்.
தற்போது அபிஷேக் சர்மாவிடம் இருந்து ரன்கள் வராவிட்டாலும் கூட அவர் பயிற்சியில் எப்படி விளையாடுகிறார் என்பது முக்கியமானது. ஒருவேளை பயிற்சியில் பந்துகளை சந்திப்பதில் அவருக்கு தடுமாற்றம் இருந்தால் நிச்சயம் அவர் பிரச்சனையில் இருக்கிறார் என்று அர்த்தம்.
இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசும் பொழுது ” அவர் மனதளவில் நம்பிக்கையை இழந்திருக்கிறாரா? என்பதை அணி நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும். ஒருவேளை அவர் பயிற்சியில் நல்ல முறையில் செயல்படவில்லை என்றால், அணி நிர்வாகம் அதை உறுதி செய்து அவரை நீக்கிவிட்டு மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்”
“இப்போது அபிஷேக் சர்மாவை நீக்கும் எண்ணத்தில் அவர்கள் இருந்தால், சஞ்சு சாம்சன் உடன் இஷான் கிஷானை துவக்க இடத்திற்கு அனுப்பி வைக்கலாம். மேலும் கீழ் வரிசையில் ரிங்கு சிங்கை கொண்டு வரலாம். இதற்கான வாய்ப்புகள் இந்திய அணி நிர்வாகத்திற்கு இருக்கிறது”
இதையும் படிங்க : அபிஷேக் நாளைக்கு எங்க கிட்ட திரும்ப அதை செய்ய மாட்டார்னு நம்புகிறேன்.. எங்க கவனம் அதுல தான் இருக்கு – சாம் கரன் பேச்சு
“அதே சமயத்தில் நானாக இருந்தால் அவரை நீக்க மாட்டேன். ஏனென்றால் எனக்கு மும்பை மைதானத்தில் அவர் வேண்டும். இதே இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் விரைவான பெரிய சதத்தை அடித்திருக்கிறார். அவருக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான நல்ல ரெகார்ட் இருக்கிறது. எனவே நான் அவரை தொடர்ந்து விளையாடுவேன்” என்று கூறியிருக்கிறார்.